Beetroot Gravy : பீட்ரூட்டை வைத்து கிரேவி செய்வது எப்படி? அசத்தலான செய்முறை இதோ!

Beetroot Gravy

நாம் நமது வீடுகளில் பீட்ரூட்டை வைத்து பல வகையான சமையல்கலை செய்திருப்போம். தற்போது இந்த பதிவில் பீட்ரூட்டை வைத்து அசத்தலான பீட்ரூட் கிரேவி செய்வது எப்படி என்று பார்ப்போம். பீட்ரூட்டில் விட்டமின் சத்துக்களான பி 1, பி2 பி 6, விட்டமின் சி, இரும்புச்சத்து, மாவு சத்து, மெக்னீசியம்,நார்ச்சத்து போன்றவை அதிகம் உள்ளது.

 பீட்ரூட்டை நம் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வதன் மூலம் ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அதிகம் ஆகிறது.  சருமத்தில் ஏற்படும் அலர்ஜியை சரி செய்கிறது.  மேலும் பீட்ரூட் சாற்றை உதட்டில் தடவி வந்தால் உதட்டில் உள்ள கருமை நீங்கும். குளிர்காலத்தில் அதிகமான பீட்ரூட்டை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏனென்றால் பீட்ரூட் ரத்த ஓட்டத்தை சீராக வைத்துக் கொள்கிறது. மேலும் அதிக ரத்த உற்பத்தியை தருகிறது.

பீட்ரூட் சாப்பிட்ட பிறகு ஆறு மணி நேரம் வரை நமது ரத்தக்குழாய் விரிவடைந்து இருக்கும். இதனால் ரத்தக்குழாய் அடைப்பு ஏற்படுவதை தடுக்க முடியும். * பீட்ரூட் சாற்றை தீக்காயம் மீது தடவினால் கொப்புளம் வராமல் தடுக்கும். இப்படிப்பட்ட ஆரோக்கிய நன்மைகள் கொண்ட பீட்ரூட்டில் கிரேவி செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை 

  • பீட்ரூட் -2
  • வெங்காயம் -1
  • தக்காளி-2
  • எண்ணெய் -4 ஸ்பூன்
  • கடுகு சிறிதளவு
  • பட்டை -2
  • சீரகம்-1 ஸ்பூன்
  • சோம்பு-1 ஸ்பூன்
  • மிளகு-5
  • தேங்காய்- 1 மூடி

செய்முறை 

மசாலா அரைக்க தேவையான பொருளான தேங்காய், சீரகம், சோம்பு, மிளகு, பட்டை ஆகியவற்றை சேர்த்து அரைத்து வைக்கவும். பிறகு ஒரு குக்கரில் நான்கு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்.

வதங்கிய பிறகு பீட்ரூட்டையும் சேர்த்து வதக்கவும். பீட்ரூட்டில் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும். அரைத்து வைத்துள்ள மசாலாவையும் சேர்த்து நன்கு கிளறி கொஞ்சம் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடவும். நான்கு விசில் விட்டு விசில் அடங்கியதும் திறக்கவும். இப்பொழுது சுவையான பீட்ரூட் கிரேவி ரெடி.

இந்த பீட்ரூட் கிரேவியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். சிறுநீர் கோளாறு இருப்பவர்கள் பீட்ரூட்டை அதிக அளவில் எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. ஏனெனில் ஆக்சிலேட் அதிகமாக இருப்பதால் சிறுநீர்க் கற்கள் உருவாகிறது ஏற்கனவே இருக்கும்கற்களின் அளவை அதிகப்படுத்துகிறது எனவே இதை தவிர்ப்பது நல்லது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்