Latest Pic AadvikAjith : நடிகர் அஜித்தின் மகனா இது? இன்னும் கொஞ்ச நாள்ல ஹீரோவா ஆய்டுவாரு போல!

நடிகர் அஜித்குமாரின் குடும்பம் எங்கேயாவது சுற்றுலா சென்றாலோ அல்லது ஏதேனும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டலோ அவர்களுடைய புகைப்படங்கள் வைரலாகி ட்ரெண்ட் ஆகிவிடும். கடைசியாக அஜித் மகள் ஹோட்டலில் இருந்த புகைப்படம் மற்றும் ஷாலினி தனது மகன், மகளுடன் ஏ.ஆர்.ரஹ்மான் நடத்திய இசை கச்சேரி ஆகியவற்றில் கலந்துகொண்டார்கள்.
அஜித்தை போல அஜித்தின் மகன் ஆத்விக்கும் மிகவும் அழகாக இருக்கிறார் எனவும், அவரும் வரும் காலத்தில் பெரிய ஹீரோவாக வருவார் எனவும் ரசிகர்கள் கூறி வருகிறார்கள். கால்பந்து விளையாட்டின் மீது அதிகம் ஆர்வம் கொண்ட ஆத்விக் பள்ளிக்கூடத்தில் நடக்கும் போட்டிகளில் கலந்து கொண்டு அதில் விளையாடி வெற்றி பெற்று வருகிறார்.
இதற்கிடையில், அவ்வபோது அஜித்தின் புகைப்படங்கள் வைரலாகி வருவது போல அவருடைய மகன் புகைப்படமும் வைரலாகி வருகிறது. அந்த வகையில், அஜித்தின் மகன் ஆத்விக் தனது அம்மா ஷாலினியுடன் விமான நிலையத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. புகைப்படத்தில் அஜித்தின் மகன் மிகவும் அழகாக போஸ் கொடுத்துக்கொண்டு நிற்கிறார்.
இந்த புகைப்படங்களை பார்த்த பலரும் நடிகர் அஜித்தின் மகனா இது? என ஆச்சரியத்துடன் கேட்டு வருகிறார்கள். மேலும், சிலர் அஜித்தின் மகன் அழகாக இருக்கிறாரே இன்னும் கொஞ்ச நாள்ல ஹீரோவா ஆய்டுவாரு போல எனவும் கூறி வருகிறார்கள்.

மேலும், நடிகர் அஜித்குமார் கடைசியாக துணிவு திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் ஆன நிலையில், அடுத்ததாக மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகவுள்ள விடாமுயற்சி திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் துபாயில் தொடங்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.