Sivaji Ganesan : அடிக்கிற சீன் வந்தா நிஜமாவே அடிப்பாரு! சிவாஜி பற்றிய உண்மையை உடைத்த குட்டி பத்மினி !

தமிழ் சினிமாவில் நடிப்பிற்கு முன் உதாரணமாக திகழும் நடிகர் சிவாஜி கணேசன் ஒரு காட்சியில் நடிக்கும் போது அந்த காட்சி நிஜமாகவே இருக்க வேண்டும் என்பதற்காக டூப் இல்லாமல் நடிப்பது சண்டை காட்சிகளில் நிஜமாகவே சண்டை செய்வது என நடிப்பார். ஏனென்றால் அந்த காட்சிகளில் அப்படி நடித்தால் படத்தில் அது நிஜமாகவே தெரியும் என்பதற்காக சிவாஜி அப்டியே நிஜமாகவே எல்லா காட்சிகளிலும் நடிப்பார்.
அந்த வகையில், ஒரு படத்தின் படப்பிடிப்பின் போது சிவாஜி ஒரு நடிகையை கன்னத்தில் அடிப்பது போல காட்சி இருந்ததுள்ளது. அந்த காட்சியின் போது மெதுவாக அடிப்பார் என அந்த நடிகை எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் சிவாஜி நிஜமாகவே வேகமாக அடித்து விட்டாராம். இதனால் அந்த நடிகையும் கடும் அதிர்ச்சியாகிவிட்டாராம்.
அந்த நடிகை வேறு யாரும் இல்லை சிவாஜியுடன் திருமால் பெருமை திரைப்படத்தில் நடித்திருந்தார் குட்டி பதமினி தான். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது சிவாஜிகணேசன் விக் வைத்துக்கொண்டு மேக்-அப் போட்டு வெயிலில் நடித்து கொண்டு இருந்தாராம். அந்த சமயம் குட்டி பதமினி வேறொரு படத்தில் நடித்து கொண்டு இருந்தாராம்.
பிறகு சிவாஜி குட்டி பதமினியை அழைத்து வாங்க என கூறியவுடன் அவர் நடித்துக்கொண்டிருந்த படத்தின் தயாரிப்பாளர்களிடம் பேசி அவரை அழைத்து திருமால் பெருமை படப்பிடிப்புக்கு வந்தார்களாம். அப்போது சிவாஜி குட்டி பதமினியிடம் என்ன நீ அவ்வளவு பிஸியா? என மிகவும் கோபத்துடன் கேட்டாராம். அந்த சமயமே குட்டி பதமினிக்கு கண்கள் எல்லாம் கலங்கிவிட்டதாம்.
பிறகு அந்த படத்தில் நடித்துக்கொண்டு இருந்த சமயத்தில் சிவாஜி அவரை அடிக்கும் படி ஒரு காட்சி எடுக்கப்பட்டு வந்ததாம். அந்த காட்சி எடுக்கும்போது நடிகை குட்டி பத்மினி சிவாஜி தன்னை மெதுவாக தான் அடிப்பார் என நினைத்தாராம். ஆனால், சிவாஜி மிகவும் வேகமாக அடித்துவிட்டாராம். அந்த காட்சியை படம் பார்க்கும் பொது உன்னிப்பாக கவனித்தால் குட்டி பத்மினி கம்மல் பறந்து போய் விழுவது தெரியும்.
சிவாஜி அடிக்கிற சீன் வந்தா உண்மையாவே அடிப்பாரு. மெதுவாக அடிக்கவேண்டும் என்று எல்லாம் அடிக்கமாட்டாரு” எனவும் நடிகை குட்டி பத்மினி தெரிவித்துள்ளார். மேலும், கடந்த 1968 -ஆம் ஆண்டு வெளியான இந்த திருமால் பெருமை திரைப்படத்தை இயக்குனர் ஏ.பி.நாகராஜன் இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய ஹிட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.