INDvsAUS : இன்று நடைபெறுகிறது இரண்டாவது போட்டி! இந்திய அணியில் களமிறங்கும் இளம் வீரர்?

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்ரேலியா கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் முதல் போட்டி கடந்த 22-ஆம் தேதி நடைபெற்ற நிலையில், அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்ரேலியா அணி 276 ரன்கள் குவித்தது. அடுத்ததாக 277 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா 48.4 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 281 ரன்கள் எடுத்து அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.
இந்த நிலையில், முதல் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்றுள்ள நிலையில், அடுத்ததாக இரண்டாவது போட்டி இன்று மதியம் 1.30 மணி அளவில் இந்தூர் ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. ஏற்கனவே முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கும் நிலையில், இன்று நடைபெறவிருக்கும் இந்த போட்டியில் வெற்றிபெற்றால் தொடரை கைப்பற்றி விடும்.
எனவே, இன்று நடைபெறவிருக்கும் இந்த போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக இரண்டு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி எடுத்து வருகிறார்கள்.
எதிர்பார்க்கப்படும் வீரர்கள் :
இந்தியா : சுப்மான் கில், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (c/wk), திலக் வர்மா (அல்லது) வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது ஷமி(அல்லது) ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்
ஆஸ்ரேலியா : டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே, கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி (wk), மார்கஸ் ஸ்டோனிஸ், சீன் அபோட், பேட் கம்மின்ஸ் (c), ஜோஷ் ஹேசில்வுட், ஆடம் ஜாம்பா
இந்திய அணியில் முதல் போட்டியில் பெஞ்சில் இருந்த இளம் வீரர் திலக் வர்மாவுக்கு இந்த இரண்டாவது போட்டியில் விளையாட வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.அதைப்போல முகமது சிராஜும் இன்று நடைபெறும் போட்டியில் விளையாட அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் அடுத்த மாதம் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளதால் ரோஹித் சர்மா , விராட் கோலி ஆகிய வீரர்களுக்கு இரண்டு போட்டிகள் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய கிரிக்கெட் அணி கே.எல்.ராகுல் தலைமையில் விளையாடி வருகிறது. இன்று நடைபெறும் இரண்டாவது போட்டி முடிந்த பிறகு 3-வது போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ள வீரர்கள் திரும்பி வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை நேருக்கு நேர்
இந்திய கிரிக்கெட் அணியும் ஆஸ்ரேலிய கிரிக்கெட் அணியும் இதுவரை 147 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேராக மோதியுள்ளது. இதில் 55 முறை இந்திய கிரிக்கெட் அணியும், 82 முறை ஆஸ்ரேலிய கிரிக்கெட் அணியும் வெற்றிபெற்றுள்ளது. 10 போட்டிகள் மழை போன்ற சில காரணங்கள் சமநிலையில் முடிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.