ஒரு வாரத்திற்குள் 5 மில்லியன் ஃபாலோவர்ஸ்.! வாட்ஸ்அப் பயனர்களுக்கு பிரதமர் மோடி நன்றி.!

PM Modi

பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் வாட்ஸ் அப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள வாட்ஸ் அப் சேனல் என்ற அம்சத்தில் கடந்த செப்டம்பர் 14ம் தேதி இணைந்தார். அப்போது தனது முதல் பதிவான புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் படத்தை செப்டம்பர் 19ம் தேதி பகிர்ந்துள்ளார்.

அவர் வாட்ஸப் சேனலில் இணைந்த ஒரே நாளில் ஒரு மில்லியன் ஃபாலோவர்ஸ்களை பெற்றார். இந்த சேனலில் பிரதமர் மோடியின் படங்கள், வீடியோக்கள், செய்திகள் மற்றும் தற்போதைய நிகழ்வுகள் மற்றும் அரசாங்க நடவடிக்கைகள் தொடர்பான முக்கியமான புதுப்பிப்புகளைப் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

இந்த நிலையில் வாட்ஸ் அப் சேனலில் இணைந்த ஒரு வாரத்திற்குள் 5 மில்லியன் (50 லட்சம்) ஃபாலோவர்ஸ்களை பிரதமர் மோடி கடந்துள்ளார். தற்போது, வாட்ஸ்அப் சேனலில் அதிக மற்றும் வேகமாக ஃபாலோவர்ஸ்களை எடுத்த உலகத் தலைவர் பிரதமர் மோடி ஆவார். இதற்கு தனது சேனலில் இணைந்த வாட்ஸ்அப் பயனர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

அவரது சேனலில் உள்ள பதிவில், “50 லட்சத்துக்கும் அதிகமான சமூகமாக நாங்கள் மாறிவிட்டதால், எனது வாட்ஸ்அப் சேனல் மூலம் என்னுடன் இணைந்த அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்! உங்கள் ஒவ்வொருவரின் தொடர்ச்சியான ஆதரவிற்கும் ஈடுபாட்டிற்கும் நன்றி. இந்த அற்புதமான ஊடகத்தின் மூலம் நாங்கள் உரையாடலைத் தொடர்வோம் மற்றும் பல்வேறு பிரச்சினைகளில் தொடர்ந்து இணைந்திருப்போம்.” என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்