India vs Australia: கடைசி ஒருநாள் போட்டி.. டாஸ் வென்று ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு

team india

இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி, முதலில் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, மொஹாலியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் கேஎல் ராகுல் தலைமையிலான இந்திய அணி, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து, 2வது ஒருநாள் போட்டியானது இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நடைபெற்றது.

அப்போட்டியில், பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்திய அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் (டிஎல்எஸ் முறையில்) வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த சமயத்தில் இன்று மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் போட்டியின் கடைசி போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது. சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியம், ராஜ்கோட்டில் மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி, ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி முதலில் பந்துவீச்சை தொடங்கியுள்ளது. இன்றைய போட்டியில், ரோஹித், கோலி, சிராஜ், குல்தீப் யாதவ் உள்ளிட்டோர் இறங்கியுள்ளனர். ஹர்திக் பாண்டியா, ஷுப்மான் கில், அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர் மற்றும் முகமது ஷமி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக இஷான் கிஷனும் போட்டியில் இடம்பெறவில்லை. இதுபோன்று, ஆஸ்திரேலியாவில் மிட்செல் மார்ஷ், மேக்ஸ்வெல், ஸ்டார்க் உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளனர்.

இந்தியா (விளையாடும் XI): ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஆஸ்திரேலியா (விளையாடும் XI): மிட்செல் மார்ஷ், டேவிட் வார்னர், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே, அலெக்ஸ் கேரி(w), கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், பாட் கம்மின்ஸ்(c), மிட்செல் ஸ்டார்க், தன்வீர் சங்கா, ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்