World Cup 2023: உலக கோப்பை தொடக்கவிழா ரத்தா..? குழப்பத்தில் ரசிகர்கள்..!

opening ceremony

இந்த ஆண்டிற்கான ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அக்டோபர் 5ம் தேதி முதல் தொடங்கி நவம்பர் 19ம் தேதிவரை நடைபெற உள்ளது. இந்த ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து, நெதர்லாந்து உள்ளிட்ட 10 நாடுகளின் அணிகள் பங்கேற்கின்றனர்.

இந்த உலக்கோப்பை தொடர் இந்தியாவில் சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட 10 நகரங்களில் நடைபெற உள்ளதால் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் அக்டோபர் 5ம் தேதி தொடங்குகிற ஒரு நாள் போட்டிக்கு முன்னதாக, நாளை அக்-4ம் தேதி (புதன்கிழமை) பிரம்மாண்ட தொடக்க விழாவானது நடைபெற உள்ளது.

இந்த ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை தொடக்க விழா அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது. இதனை இந்திய கிரிக்கெட் வாரியம் ஐசிஐசியும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது. இந்த தொடக்க விழாவில் லேசர் ஷோ வானவேடிக்கைகள் உள்ளிட்ட பல கலை நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளது.

அதன்படி, இந்த தொடக்க விழாவில் பிரபல பாலிவுட் நட்சத்திரங்களான ரன்வீர் சிங், அரிஜித் சிங், தமன்னா பாட்டியா, ஷ்ரேயாஸ் கோஷல் மற்றும் ஆஷா போஸ்லே ஆகியோர் பாடல்கள் பாடியும் நடனமாடும் ரசிகர்களுக்கு விருந்தளிக்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தொடக்க விழாவின் முக்கிய நிகழ்வாக இந்திய கேப்டன் ரோகித் சர்மா உட்பட 10 அணி கேப்டன்களும் சந்தித்து அறிமுகப்படுத்திக்கொள்வார்கள். இந்த தொடக்க விழாவில் ஐசிசி மற்றும் பிசிசிஐ உயர் அதிகாரிகள் மற்றும் பல முக்கிய முன்னாள் வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். முன்னதாக, பிசிசிஐ சார்பாக சச்சின் டெண்டுல்கர், ரஜினிகாந்த் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோருக்கு ‘கோல்ட் டிக்கெட்’ ஆனது வழங்கப்பட்டது. இதன் மூலம் இவர்கள் அனைத்து போட்டிகளிலும் பிசிசிஐயின் விருந்தினராக கலந்து கொள்ள முடியும்.

இருந்தும், நாளை நடைபெறவுள்ள தொடக்க விழாவில் கலந்துகொள்வார்களா என்று தெரியவில்லை. இந்த தொடக்க விழாவைத் தொடர்ந்து அக்டோபர் 5ம் தேதி நரேந்திர மோடி மைதானத்தில் நடப்பு சாம்பியன் ஆன இங்கிலாந்து அணி, நியூசிலாந்து அணி எதிர்கொள்ள உள்ளது. இந்தியா தனது முதல் போட்டியில் 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா அணியை எதிர்கொள்கிறது.

இந்த போட்டி அக்-8ம் தேதி நடைபெறுகிறது. இதில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி அக்டோபர் 14ம் தேதி நடைபெற உள்ளது. தற்போது, உலககோப்பைப் போட்டியில் பங்கேற்க உள்ள அணிகள் இந்தியாவிற்கு வருகை தந்து பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகின்றனர். அந்த வகையில் இன்று மூன்று பயிற்சி ஆட்டங்கள் நடைபெற உள்ளது. இதில் ஆப்கானிஸ்தான் vs ஸ்ரீலங்கா, இந்தியா vs மதர்லேண்ட், பாகிஸ்தான் vs ஆஸ்திரேலியா அணிகள் மோதுகிறது.

முக்கிய விளையாட்டுப் போட்டிகளுக்கு தொடக்க விழாக்கள் பொதுவான மரபுகளாகும். ஆனால் தற்போது உலகக் கோப்பைக்கான தொடக்க விழா நாளை நடைபெறாது என்கிற உறுதிப்படுத்தபடாத செய்தியானது பரவிவருகிறது. அதன்படி, ரெவ் ஸ்போர்ட்ஸ் என்று செய்தி நிறுவனத்தின் அறிக்கையில் தொடக்க விழா நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது ரசிகர்களின் மத்தியில் அதிருப்தியையும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், தொடக்க விழா ரத்து செய்யப்பட்டது குறித்து முறையான அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live - 09052025
India Pak War tensions
India Pakistan Tensions
schools shut
Jammu and Kashmir