சுவையான மாங்காய் மீதுதான் கல்லடி படும் – அண்ணாமலை

கோபிச்செட்டிபாளையத்தில் நடைப்பயணத்தின் போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், எந்த மாங்காய் மரம் சுவையாக இருக்கிறதோ அதன்மீது தான் கல்லெடுத்து அடிப்பார்கள்.
கல்லடிபட்டு தான் அந்த மாங்காய் மரம் மக்களுக்கு மாம்பழத்தை கொடுக்கும். அதே போல் நான் விமர்சனத்திற்கு அஞ்சுபவன் கிடையாது. எனக்கென்று தனி பாணியாக ஒரு அரசியல் இருக்கிறது. அந்த அரசியலில் எனக்கு முன்பிருந்த அரசியல்வாதிகள் இப்படி தான் அரசியல் செய்தார்கள் என அப்படிப்பட்ட அரசியலை செய்ய விரும்பவில்லை.
என்னுடைய அரசியல் மாற்று அரசியல். நான் தேசிய கட்சியில் இருந்தாலும், ஒரு பெரிய கட்சியிலிருந்தாலும் என்னை பொறுத்தவரை தமிழகத்தில் இப்பொது நடக்கக்கூடிய எந்த அரசியலும் மக்களுக்கு பிடிக்கவில்லை.
தேர்தலில் மக்களுடன் தான் பாஜக கூட்டணி அமைத்து வெற்றி பெற்றுள்ளது. தற்போதும் அப்படிதான் என தெரிவித்துள்ளார். அதிமுக – பாஜக கூட்டணி முறிவுக்கு பின், அதிமுக தரப்பிலும், பாஜக தரப்பிலும் மாறி மாறி விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், அண்ணாமலை இவ்வாறு பேட்டியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025