இன்றைய போட்டியில் சச்சினின் 2 முக்கிய சாதனையை முறியடிக்க காத்திருக்கும் விராட் கோலி!

Virat Kohli

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டிகள் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று அரை இறுதி போட்டிகளை எதிர்நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நடப்பாண்டு உலகக்கோப்பை போட்டியில் ஒவ்வொரு அணியும் கிட்டத்தட்ட 6 முதல் 7 போட்டிகளில் விளையாடியுள்ளது.

உலகக்கோப்பை தொடரில் மொத்தம் 45 லீக் போட்டிகளில் இதுவரை 32 லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், இன்று 33-ஆவது லீக் போட்டி நடைபெற உள்ளது. இந்த உலகக்கோப்பையில் இந்திய அணியை பொறுத்தவரையில் பேட்டிங், பவுலிங் என அனைத்து கோணங்களிலும் சிறப்பாக செயல்பட்டு, இதுவரை நடந்த 6 போட்டிகளிலும் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் கம்பிரமாக 2வது இடத்தில் உள்ளது.

ரூ.2000 நோட்டுகளில் 97% க்கும் அதிகமானவை திரும்பப் பெறப்பட்டுள்ளன.! ரிசர்வ் வங்கி

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இன்றை போட்டியில் இலங்கை அணியை எதிர்கொள்கிறது இந்தியா. அதுமட்டுமில்லாமல், இலங்கைக்கு எதிரான இன்றைய போட்டியில் வென்றால், முதல் அணியாக உலகக்கோப்பை அரை இறுதி போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பும் இந்திய அணி பெறும். இதனால் ரசிகர்கள் இன்றைய போட்டியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

அத்திமட்டுமில்லாமல், இலங்கைக்கு எதிரான இந்த போட்டியில் களமிறங்குவதன் மூலம் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி இரண்டு முக்கிய சாதனைகளை முறியடிக்க வாய்ப்பு இருக்கிறது. அதன்படி, இன்றைய போட்டியில் விராட் கோலி சதம் அடித்தால் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கரை சமன் செய்து விடுவார்.

சச்சின் டெண்டுல்கர் 49 சதங்கள் அடித்துள்ள நிலையில், விராட் கோலி தற்போது 48 சதங்களை அடித்திருக்கிறார். இதனால், விராட் கோலியிடம் இருந்து இன்று இன்னொரு சதம் வரும் என்றும் எதிர்பார்க்கபடுகிறது. ஏனென்றால், இலங்கை அணி என்பது விராட் கோலிக்கு மிகவும் பிடித்த அணியாகும். ஒரு நாள் கிரிக்கெட்டில் அந்த அணிக்கு எதிராக விராட் கோலி 10 சதங்களை அடித்திருக்கிறார். எனவே, 49வது சதத்தை இன்று விராட் கோலி அடித்தால், அதிவேகமாக இந்த மைல்களை எட்டிய வீரர் என்ற சாதனையும் விராட் கோலிக்கே சேரும்.

மக்களவையில் கேள்வி எழுப்ப பணம் பெற்ற புகார்.! திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி விசாரணைக்கு ஆஜர்.!

இதுபோன்று மற்றொரு சாதனையான, இன்றைய ஆட்டத்தில் விராட் கோலி 34 ரன்கள் அடித்தால், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் நடப்பாண்டில் ஆயிரம் ரன்களை கடந்த வீரர் ஆவார். ஏற்கனவே, ஒரே ஆண்டில் ஆயிரம் ரன்களை 7 முறை சச்சினும், விராட் கோலியும் எடுத்துள்ளார்கள். இந்த சமயத்தில், இன்று மேலும் 34 ரன்கள் சேர்த்தால் எட்டாவது முறையாக ஆயிரம் ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை பெற்று, சச்சின் சாதனையை முறியடித்து விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்தவகையில், இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ள இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இரண்டு முக்கிய மற்றும் மகத்தான சாதனையை படைக்க காத்திருக்கும் விராட் கோலி, தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், இன்றைய ஆட்டத்தில் விராட் கோலி இரண்டு முக்கிய சாதனைகளை படைப்பார் எனவும் ரசிகர்களிடையே எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Harry Brook and Jamie Smith partnership
student -10th mark
tvk manimaran
Harry Brook - Jamie Smith
vijay - chennai hc
Dog Bite Rabies