NZvsSL: டிரெண்ட் போல்ட் அதிரடி பந்துவீச்சு.! 171 ரன்களுக்கு சுருண்டது இலங்கை.!

NZ vs SL 1st Half

NZvsSL: ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இன்று நடைபெறும் 41வது லீக் போட்டியில், நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் நேருக்கு நேர் விளையாடி வருகிறது. பெங்களூரில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்த போட்டியில், நியூசிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. முதலில் பதும் நிஸ்ஸங்க, குசல் பெரேரா ஜோடி இலங்கை அணி சார்பாக தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினார்கள். இதில் நிஸ்ஸங்க 2 ரன்களிலேயே தனது விக்கெட்டை இழந்தார். ஆனால் குசல் பெரேரா பொறுமையாக விளையாடி நல்லவொரு தொடக்கத்தை அமைத்தார்.

இதையடுத்து களமிறங்கிய அணியின் கேப்டன் குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம மற்றும் சரித் அசலங்கா ஆகிய மூவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து அணிக்கு ஏமாற்றத்தை அளித்தனர். ஆனால் குசல் பெரேரா 22 பந்துகளில் அரைசதம் விளாசி அதிரடி காட்டினார். அடுத்த சில நிமிடங்களிலேயே, ஃபெர்குசன் வீசிய பந்தில் சாண்ட்னரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

இதனால் 11 ஓவர்கள் முடிவிலேயே இலங்கை 5 விக்கெட்களை இழந்தது. தொடர்ந்து, தனஞ்சய டி சில்வா, ஏஞ்சலோ மேத்யூஸ் களமிறங்கி பொறுப்பாக விளையாடினார்கள். ஆனால் ஏஞ்சலோ மேத்யூஸ், சான்ட்னர் வீசிய பந்தில் டேரில் மிட்செலிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். மேத்யூஸ் ஆட்டமிழந்த சில நிமிடங்களிலேயே தனஞ்சய டி சில்வாவும் ஆட்டமிழந்தார்.

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய சாமிக்க கருணாரத்ன, துஷ்மந்த சமீர மற்றும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்கள். ஆனால் மகேஷ் தீக்ஷனா, தில்ஷான் மதுஷங்க இருவரும் இறுதிவரை நிதானமாக விளையாடி ரன்கள் எடுத்தனர். முடிவில் இலங்கை அணி 46.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்துள்ளது.

இதில் அதிகபட்சமாக குசல் பெரேரா 51 ரன்களும், மகேஷ் தீக்ஷனா 39* ரன்களும் எடுத்துள்ளார்கள். நியூசிலாந்து அணியில் டிரெண்ட் போல்ட் 3 விக்கெட்டுகளும், லாக்கி பெர்குசன், ரச்சின் ரவீந்திரன் மற்றும் மிட்செல் சான்ட்னர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள். நியூசிலாந்து அணி 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் களமிறங்கவுள்ளது. இலக்கு குறைவாக இருப்பதால் நியூசிலாந்து வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 30042025
Mr. Subramanian
csk dhoni
Chennai Super Kings vs Punjab Kings ipl
retro
Chennai Super Kings vs Punjab Kings