சுற்றி சுற்றி அடித்த சுட்டி குழந்தை! பஞ்சாப் அணிக்கு சென்னை வைத்த டார்கெட்!
பஞ்சாப் அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 19.2 ஓவர்கள் முடிவில் 190 ரன்கள் எடுத்துள்ளது.

சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. எனவே, முதலில் சென்னை அணி பேட்டிங் செய்தது.
முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடக்கத்தை கொஞ்சம் சொதப்பலாக தான் தொடங்கியது என்று கூறலாம். ஷேக் ரஷீத் 11, ஆயுஷ் மத்ரே 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்ததாக சென்னை அணியில் அதிரடி மாற்றமாக மூன்றாவது வீரராக சாம் கரண் களமிறங்கினார். களமிறங்கிய சுட்டிக்குழந்தை எந்த அளவுக்கு அதிரடி காட்ட முடியுமோ அந்த அளவுக்கு அதிரடி காட்டினார் என்று தான் சொல்லவேண்டும்.
அவருடன் சிறிது நேரம் களத்தில் நின்ற ஜடேஜா 17 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். அவருக்கு அடுத்ததாக களமிறங்கிய டெவால்ட் ப்ரீவிஸ் சாம் கரண் உடன் இணைந்து அதிரடி காண்பித்தனர். கொஞ்ச நேரத்தில் அந்த அதிரடியை விட்டு அணிக்கு தடுமாற்றத்தை கொடுக்கும் வகையில், டெவால்ட் பிரெவிஸ் 32 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். இருப்பினும் அரை சதம் விளாசி அசுர வேகத்தில் சதம் அடிக்க சென்று கொண்டு இருந்தார்.
அவருடன் சிவம் துபேவும் களத்தில் நின்ற காரணத்தால் கண்டிப்பாக பஞ்சாப் அணிக்கு பயங்கர டார்கெட் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்ததைப்போலவே இருவரும் சேர்த்து பஞ்சாப் பந்துவீச்சாளர்கள் பந்துகளை சிக்ஸர் பவுண்டரி என பறக்கவிட்டார்கள் என்று சொல்லலாம். அந்த சமயம், சாம் கரண் 88 ரன்களுக்கு வெளியேறினார்.
அவருக்கு அடுத்ததாக பலரும் எதிர்பார்த்த தோனி களத்தில் இறங்கினார். வந்த முதல் பந்தே பவுண்டரி விளாசினார்.ஒரு சிக்ஸர் விளாசி அவரும் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். இறுதி நம்பிக்கையாக துபே மற்றும் ஹூடா களத்தில் நின்று கொண்டு இருந்தார்கள். அந்த சமயம் என்னையும் விட்ருங்க என ஹூடா 2 ரன்களுக்கு வெளியேறினார். அவருக்கு அடுத்ததாக தொடர்ச்சியாக விக்கெட்களும் சரிந்தது.
இறுதியாக சென்னை அணியின் அதிரடி ஆட்டம் காரணமாக 19.2 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்துள்ளது. சென்னை அணி 190 ரன்கள் எடுத்துள்ள நிலையில், அடுத்ததாக 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்குகிறது. மேலும், பஞ்சாப் அணியின் பந்துவீச்சை பொறுத்தவரையில் அதிகபட்சமாக சுழற்பந்துவீச்சாளர் யுவேந்திர சாஹல் 4 விக்கெட்களை வீழ்த்தினார். 19 ஓவரில் 4 விக்கெட் வீழ்த்தி ஹாட்ரிக் விக்கெட்களையும் அவர் வீழ்த்தி அசத்தினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வெற்றிபெறுமா பஞ்சாப்? சென்னைக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!
April 30, 2025