இந்தியாவுக்கான ஆப்கானிஸ்தான் நாட்டின் தூதரகம் நிரந்தரமாக மூடல்… காரணம் என்ன?

தலைநகர் டெல்லியில் உள்ள தங்களது தூதரகம் நிரந்தரமாக மூடப்படுவதாக ஆப்கானிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. ஆப்கான். தலிபான் அரசு சார்பில் தற்போது தூதர்கள் யாரும் இல்லாத நிலையில் தூதரகத்தை மூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 1 முதல் தங்கள் செயல்பாடுகளை நிறுத்தி கொள்வதாக ஆப்கான் தூதரகம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், தற்போது நிரந்தரமாக மூடப்பட்டது.
கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் திடீரென வெளியேறியதை அடுத்து, தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற தாக்குதலில் ஈடுபட்டனர். இதன்பின், ஆப்கானிஸ்தான் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தலிபான் அதிகாரத்திற்கு சென்றது. தற்போது, ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி நடைபெற்று வருகிறது. அதிகாரத்தை கைப்பற்றியதும் பெண்களுக்கான உரிமைகளை பறிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
உத்தரகண்ட் சுரங்க விபத்து.! மீட்பு பணியில் தொய்வு.!
இருப்பினும், ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சிக்கு உலக நாடுகள் பல அங்கீகாரம் வழங்கவில்லை. தங்களது நாடுகளில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகங்களுக்கு சிறப்பு அதிகாரம் வழங்கவும் மறுப்பு தெரிவித்து வந்தன. இந்த சூழலில் தலைநகர் டெல்லியில் உள்ள தூதரகத்தை மூடுவதாக ஆப்கானிஸ்தான் அரசு அறிவித்தது.
அதன்படி, தங்களது தூதரகம் நிரந்தரமாக மூடப்படுவதாக ஆப்கானிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. இதற்கு காரணங்களையும் ஆப்கானிஸ்தான் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் கூறியதாவது, இந்தியாவிடம் இருந்து எங்களுக்கு எந்த சிறப்பு உதவியும் கிடைக்கவில்லை, இதன் காரணமாக எங்கள் வேலையை திறம்பட செய்ய முடியவில்லை என்றும் ஆப்கானிஸ்தான் குடிமக்களின் தேவைகள் மற்றும் நலன்களை எங்களால் பூர்த்தி செய்ய முடியவில்லை எனவும் கூறியுள்ளனர்.
சீனாவில் அதிகரிக்கும் காய்ச்சல்.. புதிய வைரஸ் கண்டறியப்படவில்லை.! WHO-விடம் சுகாதாரத்துறை தகவல்.!
மேலும், ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் வளங்கள் குறைவதால், எங்கள் பணியைத் தொடர்வது பெரும் சவாலாக மாறியுள்ளது. தூதரக அதிகாரிகளின் விசா புதுப்பித்தல் முதல் மற்ற பணி வரை, எங்களுக்கு தேவையான உதவி சரியான நேரத்தில் கிடைக்கவில்லை. இதனால் பிரச்சனைகள் அதிகரித்து வருகிறது.
தலிபான் அரசு நியமிக்கும் தூதருக்கு இந்திய சட்ட அங்கீகாரம் அளிக்க விரும்பவில்லை. தலிபான் அரசை அங்கீகரிக்கும் வரை தூதரக விவகாரத்தில் முடிவு எட்டப்படாது என காரணங்களை தெரிவித்து டெல்லியில் உள்ள தூதரகத்தை நிரந்தரமாக மூடப்போவதாக ஆப்கானிஸ்தான் அறிவித்துள்ளது. இதனால், வர்த்தக ரீதியாக இந்தியாவுக்கு பாதிப்பு இல்லை என்றாலும், இந்தியாவில் இருக்கும் ஆப்கன் மாணவர்களுக்கு பாதிப்பு அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025