டெஸ்ட் தொடருக்கு ஆயத்தம்…அறுவை சிகிச்சை செய்து கொண்ட பென் ஸ்டோக்ஸ்!

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரில் உடல் தகுதியுடன் பங்கேற்பதற்காக, இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தனது இடது முழங்காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார்.
முன்னதாக, இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி மூன்று ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் பந்துவீச முடியவில்லை. மேலும் இதனால், இந்தியாவில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் கூட பேட்டராக மட்டுமே இடம்பெற்றார். அவரது உடல் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்க வில்லை என்பதால், உலகக் கோப்பை முடிந்த பிறகு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப் போவதாகத் தெரிவித்திருந்தார்.
அதன்படி, தற்போது தனது இடது முழங்காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். இது குறித்து பென் ஸ்டோக்ஸ், தனது சமூக வலைத்தள பக்கத்தில், அறுவை சிகிச்சை முடிந்தது என்று லண்டனின் குரோம்வெல் மருத்துவமனைக்கு வெளியே ஊன்றுகோல் உதவியுடன் நின்று கொண்டிருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து கொண்டு, “மறுவாழ்வு இப்போது தொடங்குகிறது” என குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram
இந்தியாவில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி 25ம் தேதி ஹைதராபாத்தில் தொடங்குகிறது. ஜனவரி 24 முதல் மார்ச் 11 வரை இங்கிலாந்து அணி இந்தியாவுடன் 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இங்கிலாந்து அணி இந்தியா வருவதற்காக இரண்டு வாரங்களுக்கு முன்பே ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு பயிற்சி மேற்கொள்ள புறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அடுத்த ஆண்டு அதாவது 2024ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார் என சிஎஸ்கே அணி தெரிவித்தது.
அதன்படி, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடக்கும் இந்தியா உடனான 5 போட்டிகள் கொண்டு டெஸ்ட் தொடர், டி20 உலகக்கோப்பை ஆகியவை கருத்தில் கொண்டு பென் ஸ்டோக்ஸ் விலகி உள்ளதாக சென்னை அணி தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் : 58 ஆண்டுகள்.., வரலாற்று வெற்றியைப் பதிவு செய்த இந்தியா.!
July 7, 2025
அரோகரா.. அரோகரா.. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கோலாகலமாக நடைபெற்றது மகா கும்பாபிஷேகம்..!
July 7, 2025