உங்க குழந்தை நெல்லிக்காய் சாப்பிட மாட்டேங்கிறாங்களா ..! அப்போ இந்த மாதிரி செஞ்சு கொடுங்க ..!

Amla sweet

நெல்லிக்காயில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது, ஏழைகளின் ஆப்பிள் நெல்லிக் காய் தான்  இதை அப்படியே கொடுத்தால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள் ஆனால் இந்த மாதிரி மிட்டாய் போன்று  செய்து கொடுத்துப் பாருங்கள் அப்புறம் வேண்டான்னு சொல்ல மாட்டர்கள்.இதை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால் மருத்துவரிடம் செல்லும் நிலைமை ஏற்படாது .  வாங்க எப்படி செய்றதுன்னு பாப்போம்.

தேவையான பொருட்கள்

நெல்லிக்காய்= 350 கிராம்
இஞ்சி= ஒரு துண்டு
வெல்லம் = தேவையான அளவு
நெய்= ஒரு ஸ்பூன்
சோள மாவு= ஒரு ஸ்பூன்

செய்முறை
நெல்லிக்காயை ஒரு இட்லி பாத்திரத்தில் 10 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும். பிறகு அதை கொட்டை நீக்கி சிறிது சிறிதாக நறுக்க வேண்டும். இஞ்சியை துருவி நெல்லிக்காயுடன் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை, இப்போது அரைத்த விழுது எவ்வளவு உள்ளதோ அந்த அளவுக்கு வெல்லம்  எடுத்துக் கொள்ள வேண்டும். அதைவிட கால் மடங்கு அதிகமாக கூட  எடுத்துக் கொள்ளலாம். இப்போது ஒரு பாத்திரத்தில் மிதமான தீ வைத்து அரைத்த விழுதை சேர்க்கவும் .அதிலே வெல்லதயும்  சேர்த்து கிளற வேண்டும் .

அதில் உள்ள தண்ணீர்  வற்றும் வரை கிளறவும், பிறகு அதிலேயே சோள மாவு சேர்த்து கலக்கி விடவும் . மறுபடியும் தண்ணீர் வற்ற   நன்கு கிளற வேண்டும் இது ரெடியாக 20 நிமிடங்கள் வரை எடுத்துக் கொள்ளும் சோள மாவு தண்ணீர் வற்றியதும் நெய் சேர்த்து கலந்துவிட்டு இறக்கவும்.
சூடு ஆறியதும் அதை ஒரு டப்பாவில் நெய் தடவி மாற்றிக் கொள்ளவும் அதை ஒரு மணி நேரம் அப்படியே வைத்து விட வேண்டும் பிறகு அது ஒரு கெட்டியான பதத்திற்கு வந்து விடும், அதை ஒரு பிளேட்டில் மாற்றி நமக்கு எந்த சைஸில் வேண்டுமோ நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளலாம்.

நெல்லிக்காய்
இதில் மூலப்பொருளாக நாம் நெல்லிக்காய் சேர்த்துள்ளோம் இதில் உள்ள விட்டமின் சி சத்து நமக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது மேலும் கண் பார்வை திறனை மேம்படுத்துகிறது முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளர உதவுகிறது.

இஞ்சி
இஞ்சி செரிமானத்தை  தூண்டக்கூடியது. மேலும் சளி இருமல் போன்றவை நம்மை நெருங்க விடாமல் பாதுகாத்துக் கொள்ளும் .கெட்ட கொழுப்பையும் கரைத்து விடும்.

வெல்லம்
வெல்லம் இந்த நெல்லிக்காய் மிட்டாய்க்கு இனிப்பு சுவையை தருவதோடு அதில் உள்ள இரும்புச்சத்து ரத்த சோகை வராமலும் பாதுகாக்கிறது.
எனவே இந்த நெல்லிக்காய் மிட்டாய் தினமும் நம் குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் டப்பாவில் கொடுத்த அனுப்பலாம் நெல்லிக்காயை நாம் அப்படியே கொடுத்து அனுப்பினால் அது திரும்ப நமக்கே வீட்டுக்கு வந்து விடும் இவ்வாறு அவர்களுக்கு பிடித்த மிட்டாய் முறையிலே செய்து கொடுத்தால் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Harry Brook - Jamie Smith
vijay - chennai hc
Dog Bite Rabies
Nikitha
TVK Vijay
TamilagaVettriKazhagam