என்னது எனக்கு திருமணமா? அஞ்சலி சொன்ன பதில்!

நடிகை அஞ்சலி தற்போது ஆரம்ப காலத்தை போல பல படங்களில் நடிக்கவில்லை என்றாலும் சில முக்கியமான படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில், இவர் தற்போது இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள ஏழு கடல் ஏழுமலை படத்தில் நடித்து முடித்துள்ளார். இதற்கிடையில், இவர் தொழிலதிபர் ஒருவரை காதலித்து வருவதாகவும், அவரை திருமணம் செய்துகொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.
இந்த தகவல் உண்மையா என்பது தெரியாமல் இருந்த நிலையில், தற்போது இதற்கு நடிகை அஞ்சலி விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” நான் சமீபத்தில் ஒரு செய்தியை பார்த்தேன். அதில் நான் ஒரு தொழிலதிபர் ஒருவரை காதலித்து வருகிறேன் என்று கூறியிருந்தார்கள்.
பாலிவுட் வாய்ப்பை மிஸ் செய்த த்ரிஷா! அலேக்காக தூக்கிய சமந்தா!
அது மட்டுமின்றி அவரை நான் விரைவில் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகி விடுவேன் என்றும் கூறியிருந்தார்கள். இதனை பார்க்கும் போது எனக்கு சிரிப்பு தாங்கவே முடியவில்லை. அவ்வளவு சிரிப்பாக இருந்தது. ஏனென்றால், எனக்கு இப்போது திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் கொஞ்சம் கூட இல்லை.
இருந்தாலும் என்னுடைய திருமணம் பற்றி இப்படி வதந்திகள் பரவுவது எனக்கு வேதனை கொடுக்கிறது. சில நேரங்களில் இதனை பற்றி விளக்கம் அளிக்காமல் இருக்கலாம் என்று நினைப்பேன் ஆனால், என்னால் இருக்க முடியாது அதனால் விளக்கம் அளித்து விடுகிறேன்” எனவும் நடிகை அஞ்சலி தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வணக்கம் சோழ மண்டலம் : “நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க” – தமிழில் பேசிய பிரதமர் மோடி.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழீஸ்வரரை தரிசனம் செய்த பிரதமர் மோடி.!
July 27, 2025
வழிநெடுக தூவப்பட்ட மலர்கள்.., சோழபுரத்தில் மோடி சாலைவலம்..! பொதுமக்கள் உற்சாக வரவேற்பு.!
July 27, 2025
மேட்டூர் அணையில் அதிகரிக்கும் நீர்வரத்து : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழபுரத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடி.!
July 27, 2025