கால்பந்து ஜாம்பவான் ஃபிரான்ஸ் பெக்கன்பவுர் காலமானார்..!

ஜெர்மனியின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான ஃபிரான்ஸ் பெக்கன்பவுர் தனது 78வது வயதில் நேற்று (திங்கள்கிழமை) காலமானார். பெக்கன்பவுர் 1974 ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற மேற்கு ஜெர்மனி அணியின் கேப்டனாக இருந்தார். 1966 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலகக்கோப்பை மூலம் தனது 20-வது வயதில் பெக்கன்பவுர் சர்வதேச அரங்கில் அறிமுகமானார். பெக்கன்பவுர் மேற்கு ஜெர்மனிக்காக 103 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
ஃபிரான்ஸ் பெக்கன்பவுர் தலைமையில் 1972-ல் பெல்ஜியத்தில் நடந்த ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பை மேற்கு ஜெர்மனிக்கு முதல் பெரிய வெற்றியை பெற்று கொடுத்தார். அதன்பிறகு, 1966ல் நடந்த இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியிடம் ஏற்பட்ட தோல்விக்கு பழிதீர்த்து, 1974 ஆம் ஆண்டு சொந்த மண்ணில் உலக கோப்பையை மேற்கு ஜெர்மனி கைப்பற்றியது. பெக்கன்பவுர் சிறப்பான செயல்பாட்டிற்காக 1972 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் Ballon d’Or விருதை வென்றார்.
1983-ம் ஆண்டு அவர் ஓய்வு பெற்றார். இதைத்தொடர்ந்து, அவர் மேற்கு ஜெர்மனி அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். பெக்கன்பவுர் 1986 மற்றும் 1990 ஆம் ஆண்டுகளில் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டிகளில் மேற்கு ஜெர்மனி அணியை வழிநடத்தினார்.
அவரது மேற்கு ஜெர்மனி அணி 1986 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவிடம் தோற்றது. இருப்பினும் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இத்தாலியில் நடந்த உலகக்கோப்பை மேற்கு ஜெர்மனி அணி உலகக்கோப்பையை கைப்பற்றியது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025