அயர்லாந்தை பந்தாடி இந்திய அணி அபார வெற்றி..!

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 15-வது போட்டியாக இன்று இந்திய அணியும், அயர்லாந்து அணியும் மோதியது. அதில் முதலில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடியது.
தொடக்க வீரர்களின் விக்கெட் வீழ்ந்த பின் களமிறங்கிய முஷீர் கான், கேப்டன் உதய் சஹாரன் இருவரும் கூட்டணி அமைத்து விளையாடினர். இருவரும் மிக சிறப்பாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். அதில் முஷீர் கான் 118 எடுத்து ரன் அவுட் ஆனார். பின் உதய் சஹாரன் 75 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால் இறுதியில் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 301 எடுத்தது.
அதை தொடர்ந்து 302 என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி ஆரம்பம் முதல் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
இறுதியில் அந்த அணி 29.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 100 ரன்கள் மட்டும் எடுத்தது. இந்திய அணியில் நமன் திவாரி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனால் இந்திய அணி 201 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பெற்றது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025