ரெக்கார்ட் ப்ரேக் !! தோனி சாதனையை உடைத்த ரோஹித் சர்மா!!

ரோஹித் சர்மா: நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று இந்தியா அணியும், அயர்லாந்த் அணியும் மோதியது. இந்த போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. மேலும், இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா 52 ரன்கள் எடுத்து அசத்தி இருப்பார்.
இதன் மூலம் அவர் புதிய சாதனைகளை படைத்துள்ளார். அது என்னவென்றால் சர்வேதச டி20 போட்டிகளில் எடுத்தவர்கள் 2-வதாக இருந்த பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் அசாமை (4023 ரன்கள்) பின்னுக்கு தள்ளி, பட்டியலில் தற்போது ரோஹித் சர்மா (4026 ரன்கள்)2ம் இடத்தில் இருந்து வருகிறார். மேலும், இந்த போட்டியில் அவர் 3 சிக்ஸர்கள் அடித்துள்ளார் . அதன் மூலம் டி20 போட்டிகளில் (மொத்தமாக) 600 சிக்ஸர்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்,
இது மட்டுமல்லாது இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனியின் சாதனையையும் இந்த வெற்றியின் மூலம் பதிவு செய்துள்ளார். அதாவது தோனி இந்திய அணியின் கேப்டனாக 42 வெற்றிகளை பெற்றுக் கொடுத்த நிலையில், ரோஹித் சர்மா 43 வெற்றிகளை பெற்றுக் கொடுத்து கேப்டனாக புதிய சாதனை படைத்து இருக்கிறார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025