மீண்டும் நியூ லுக்கில் எஸ்.ஜே.சூர்யா.. விக்னேஷ் சிவன் இயக்கும் புது பட போஸ்டர்.!

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி : இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் LIC என இருந்த படத்தின் தலைப்பை சமீபத்தில் LIK (Love Insurance Kompany) என மாற்றப்பட்டது. தற்போது இப்படத்தின் எஸ்.ஜே.சூர்யாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தயாரிப்பாளர்கள் பகிர்ந்துள்ளனர்.
Introducing the fabulous @iam_SJSuryah ⭐️ #LoveInsuranceKompany #LIK
@VigneshShivN @pradeeponelife @IamKrithiShetty @anirudhofficial@iYogiBabu @Gourayy @sathyaDP @PradeepERagav@PraveenRaja_Off @Rowdy_Pictures @proyuvraaj pic.twitter.com/AYLdwwQ4W0
— Seven Screen Studio (@7screenstudio) July 27, 2024
போஸ்டரில் எஸ்.ஜே.சூர்யாவின் தோற்றம் கவனம் ஈர்த்துள்ளது. நடிகர் நிறுவனத்தின் கட்டிடத்தின் மேல் ஆடம்பர உடையில் சன்கிளாஸுடன் அமர்ந்துள்ளார். கையில் ஹாலோகிராபிக் மோதிரத்தை பிடித்துள்ளார். இதை வைத்து பார்க்கும் பொழுது, அவர் லவ் இன்சூரன்ஸ் கம்பெனியின் தலைவராக நடிக்கிறார் போல் தெரிகிறது.
இந்த போஸ்டரில் இருக்கும் எஸ்.ஜே.சூர்யாவின் கெட்டப்பை பார்த்தால், நியூ படத்தின் கெட்டப் போல் இருக்கிறது. நியூ படத்தில் இதே போல் தாடி – மீசை இல்லாமல், சன்கிளாஸுடன் வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.
அனிருத் இசையில் இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ கீழ், நயன்தாரா மற்றும் எஸ்.எஸ்.லலித்குமார் தயாரிக்கின்றனர். படத்தில், பிரதீப் மற்றும் எஸ்.ஜே.சூர்யா தவிர, கிருத்தி ஷெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வெளியீட்டு தேதி பற்றிய கூடுதல் விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025