“தயவு செஞ்சு போட்டோ எடுக்காதீங்க”…விராட் கோலி வைத்த கோரிக்கை!!
மனைவி அனுஷ்கா மற்றும் குழந்தைகளை போட்டோ எடுக்கவேண்டும் என விராட் கோலி ரசிகர்கள் மற்றும், பத்திரிகையாளர்களிடம் கேட்டுக் கொண்டார்.

மும்பை : பொதுவாகவே, சினிமா துறையிலும் சரி, விளையாட்டுத் துறைகளிலும் சரி சில பிரபலங்கள் தங்களுடைய குழந்தைகளின் முகத்தை ஊடகத்திற்கு முன் காட்ட விருப்பப்படுவது இல்லை. அப்படி தான் இந்திய வீரர் விராட் கோலியும் கூட. 2017 இல் திருமணம் செய்து கொண்ட அனுஷ்கா மற்றும் விராட் தம்பதியினருக்கு 2021 இல் வாமிகா என்ற பெண் குழந்தை பிறந்தது. ஆரம்பத்திலிருந்தே விராட் கோலி தன்னுடைய குழந்தையின் புகைப்படத்தை வெளியிடாமல் தனிப்பட்ட விஷயமாக வைத்து வருகிறார்.
குழந்தையின் முகத்தை எதற்காகக் காட்டவில்லை என விமர்சனங்களும் எழுந்தது. அதற்கு ஏற்கனவே “நாங்கள் எங்கள் குழந்தைக்குத் தனியுரிமையைத் தேடுகிறோம், சமூக ஊடகங்களிலிருந்து விலகி அவளது வாழ்க்கையைச் சுதந்திரமாக வாழ அவளுக்கு ஒரு வாய்ப்பை வழங்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய விரும்புகிறோம். இந்த முடிவுக்கு மதிப்பு கொடுத்து யாரும் புகைப்படம் எடுக்க முயற்சி செய்யவேண்டாம்” எனக் கேட்டுக்கொண்டார்.
இருப்பினும், அவர் குடும்பத்துடன் எங்கையாவது சென்றாலே புகைப்படம் எடுக்கப் பலரும் முயற்சி செய்தும் வருகிறார்கள். அப்படி தான் தற்போது பெர்த்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா சர்மா மற்றும் குழந்தைகளுடன் மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்றார்.
அவரை பார்த்த ரசிகர்கள் மற்றும் ஊடகத்தைச் சேர்ந்த பலரும் அவரை புகைப்படம் எடுக்க முயற்சி செய்தனர். இதனைக் கவனித்த விராட் கோலி தயவு செய்து என்னை மட்டும் புகைப்படம் எடுத்துக்கொள்ளுங்கள் என்னுடைய மனைவி குழந்தையுடன் இருப்பதைப் புகைப்படம் எடுக்காதீர்கள் எனக் கேட்டுக்கொண்டார். விராட் கோலி வைத்த கோரிக்கையைப் பார்த்து அங்கிருந்தவர்களுக்கு நாங்கள் எடுக்கவில்லை எனக் கூறினார்கள்.
மேலும், விராட் கோலியின் சமீபத்திய டெஸ்ட் போட்டியில் பேட்டிங் பார்ம் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. குறிப்பாக, கடைசி 10 இன்னிங்ஸ்களில் ஒரே ஒரு அரைசதம் மட்டுமே அடிக்க முடிந்தது. அதைப்போல, சமீபத்தில் முடிவடைந்த நியூசிலாந்துக்கு எதிரான தொடரில், 6 இன்னிங்ஸ்களில் வெறும் 93 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனையடுத்து தற்போது பார்டர்-கவாஸ்கர் டிராபிக்காக இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ள நிலையில், அந்த போட்டியில் சிறப்பாக விளையாடி ரன்கள் குவிப்பாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
10 baar request karra hu ???? #viratkohli pic.twitter.com/wUuTQVHhem
— Viral Bhayani (@viralbhayani77) November 10, 2024
லேட்டஸ்ட் செய்திகள்
ராஜஸ்தான் போர் விமானம் விழுந்து விபத்து! 2 பேர் பலி?
July 9, 2025