Live : இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் முதல்… சர்வதேச நிகழ்வுகள் வரை…
இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றம் முதல் புதிய போப் தேர்வு செய்யப்பட்ட நிகழ்வு வரை பல்வேறு செய்திகளை இதில் காணலாம்.

சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் இரு நாட்டு எல்லைகளிலும் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர். நேற்று இரவு பாகிஸ்தான் நடத்திய டிரோன் தாக்குதல்களை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தி தாக்குதலை முறியடித்துள்ளது.
போப் பிரான்சிஸ் மறைவை அடுத்து நேற்று புதிய போப் தேர்வு செய்யப்பட்டார். முதல் முறையாக அமெரிக்கவை சேர்ந்தவர் போப்-ஆக அறிவிக்கப்பட்டுள்ளார். ராபர்ட் பிரான்சிஸ் ப்ரீவோஸ்ட் புதிய போப்பாக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் போப் 14ஆம் லியோ என அழைக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.