சீன மற்றும் துருக்கி ஊடகங்களின் எக்ஸ் கணக்குகள் முடக்கம் – மத்திய அரசு அதிரடி.!
பாகிஸ்தான் உடனான போரில் இந்தியாவுக்கு எதிராக கருத்துக்களை பரப்பி வந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி ஊடகமான TRT Word-ன் X தள கணக்கையும் மத்திய அரசு இந்தியாவில் முடக்கியுள்ளது. இந்தியா – பாகிஸ்தான் மோதலின்போது, பாகிஸ்தானுக்கு ஆதரவாக பொய் பிரச்சாரத்தை செய்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதில், குளோபல் டைம்ஸ் என்பது சீன கம்யூனிஸ்ட் கட்சிக்குச் சொந்தமான பீப்பிள்ஸ் டெய்லியின் கீழ் வரும் ஒரு ஆங்கில டேப்ளாய்டு செய்தித்தாள் ஆகும், அதே நேரத்தில் சின்ஹுவா சீனாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமாகும்.
அதாவது, “பாகிஸ்தானில் பல இடங்களில் இந்தியா நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, மற்றொரு இந்திய போர் விமானத்தை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியுள்ளது” என்ற செய்தியை சீனாவில் உள்ள இந்தியத் தூதரகம் உண்மைச் சரிபார்த்ததைத் தொடர்ந்து, சீனாவின் குளோபல் டைம்ஸ் மீதான தடை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் இராணுவத்தின் ஆதாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
(3/n) @PIBFactCheck had brought to light instances of fake news with old images showing crashed aircrafts being re-circulated in various forms in the current context of #OperationSindoor.
While one is from an earlier incident involving an Indian Air Force (IAF) MiG-29 fighter jet… pic.twitter.com/QVKUplKYry— India in China (@EOIBeijing) May 7, 2025