கேரளாவில் ரெட், ஆரஞ்சு எச்சரிக்கை!! கனமழையால் 10 பேர் உயிரிழப்பு.., விரைந்தது NDRF குழு.!
தொடர்ந்து பெய்து வரும் கனமழையைக் கருத்தில் கொண்டு, கோட்டயம், கொல்லம் மற்றும் இடுக்கி மாவட்ட ஆட்சியர்கள் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று (சனிக்கிழமை) விடுமுறை அறிவித்துள்ளனர்.

திருவனந்தபுரம்: கேரளா, கர்நாடகா மற்றும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் தென்மேற்கு பருவமழை நாளை (ஜூன் 1) முதல் 12ம் தேதி வரை தீவிரம் குறைந்து காணப்படும். தற்பொழுது, கேரளாவில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்திருப்பதால் கேரளாவில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்திருப்பதால் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளது. இதனால் மீட்பு பணிகளை மேற்கொள்ள தமிழகத்தில் இருந்து NDRF விரைந்துள்ளது.
இந்நிலையில், மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி நேற்று மட்டும் 10 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையைக் கருத்தில் கொண்டு, கோட்டயம், கொல்லம் மற்றும் இடுக்கி மாவட்ட ஆட்சியர்கள் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று (சனிக்கிழமை) விடுமுறை அறிவித்துள்ளனர்.
கேரளாவில் காசர்கோடு, கண்ணூர், வயநாடு, திருச்சூர், இடுக்கி, எர்ணாகுளம், கோட்டயம், ஆலப்புழா, பத்தனம்திட்டா உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்டும், திருவனந்தபுரம், கொல்லம், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம். 24 மணி நேரத்திற்குள் 7 முதல் 11 செ.மீ வரை கனமழை பெய்யும் என்று கணித்துள்ளது.
விரைந்தது தேசிய பேரிடர் குழு
கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 4 குழுக்களாக கிளம்பியுள்ளனர். ஒரு குழுவிற்கு 30 பேர் வீதம் 4 குழுக்களை சேர்ந்த 120 வீரர்கள் சாலை மார்க்கமாக விரைந்தனர். பத்தினம் திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம், கோழிக்கோடு ஆகிய பகுதிகளில் மீட்புப் பணியில் ஈடுபடுவார்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
திருவள்ளூர் 8வயது சிறுமி பாலியல் வழக்கு: நெல்லூரில் வட மாநிலத்தை சேர்ந்த இருவர் கைது.!
July 19, 2025
”தமிழகத்தை 4 பேர் இத்தனை நாளாக ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றனர்” – இபிஎஸ் குற்றச்சாட்டு.!
July 19, 2025
மு.க.முத்து மறைவு – மநீம தலைவர் கமல்ஹாசன் இரங்கல்!
July 19, 2025