கூட்டத்தொடர் தொடங்கிய சில நிமிடங்களில் மக்களவை அமளியால் ஒத்திவைப்பு.!

பஹல்காம் விவகாரத்தில் பிரதமர் பதிலளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டு வந்த நிலையில், நன்பகல் 12 மணி வரை மக்களவை ஒத்திவைப்பட்டுள்ளது.

Parliament Session 2025

டெல்லி : பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. இன்று முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மழைக்கால கூட்டத்தொடரில் 8 புதிய மசோதாக்களை தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. மக்களவை மற்றும் மாநிலங்களவை இன்று காலை 11 மணிக்குக் கூடியன.

மக்களவையில் கேள்வி நேரம் தொடங்கியவுடன், சில நிமிடங்களிலேயே எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கூச்சலிடத் தொடங்கினர். சபாநாயகர் ஓம் பிர்லா எதிர்க்கட்சி எம்.பி.க்களை சமாதானப்படுத்த முயன்றார்.

பஹல்காம் தாக்குதல் குறித்து முதலில் விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூச்சலிட்டு வந்த நிலையில், ”அரசாங்கம் ஒவ்வொரு பிரச்சினைக்கும் பதிலளிக்க விரும்புகிறது. சபை செயல்பட வேண்டும், நீங்கள் இங்கு கோஷங்களை எழுப்ப வரவில்லை. சபை விதிகள் மற்றும் விதிமுறைகளின்படி செயல்படுகிறது. விதிகளின்படி எழுப்பப்படும் அனைத்து பிரச்சினைகளும் விவாதிக்கப்படும்” என்று ஓம். பிர்லா சொல்லி பார்த்தார்.

தொடர்ந்து அமளி நீடித்ததால், பிர்லா கூட்டத்தொடரை நண்பகல் வரை ஒத்திவைத்தார். அதன்படி, நண்பகல் 12 மணிவரை நாடாளுமன்ற மக்களவை ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஓம். பிர்லா தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்