முகேஷ் அம்பானியின் ஜியோ செல்ஃபோன் சேவை நிறுவனமானது கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிந்த காலாண்டில் 271 கோடி ரூபாய் நிகர நஷ்டத்தை பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில் 21 கோடி ரூபாய் மட்டுமே நஷ்டம் ஏற்பட்டிருந்த நிலையில் இந்தாண்டு அது சுமார் 13 மடங்கு அதிகரித்துள்ளது. எனினும் அவரது மற்றொரு நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மட்டும் கடந்த காலாண்டில் 8 ஆயிரத்து 109 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது. ஆனால் அவருடைய சொத்து மதிப்பு […]
பெங்களூருவை சேர்ந்த மூத்த பத்திரிகையாளரும் முற்போக்கு எழுத்தாளருமான கவுரி லங்கேஷ் (55), கடந்த மாதம் பெங்களூருவில் உள்ள தனது வீட்டின் வாசலில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு பலரும் அவருக்கு ஆதரவாக பேசவும் எழுதவும் தொடங்கினர் . இந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதுவரை குற்றவாளிகள் யாரென்று கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில் குற்றவாளிகளின் மாதிரி புகைப்படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர். இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய சிறப்புப் புலனாய்வுக் குழு […]
கடந்த 5 நாட்களில் பிஜேபியின் யோகி ஆதித்தியநாத் முதல்வராக ஆளும் உத்திர பிரதேச மாநிலம் கோரக்பூர் மருத்துவமனையில் போதிய பராமரிப்பின்றி மேலும் 75 குழந்தைகள் மரணம் அடைந்துள்ளனர். இந்நிலையில் சுகாதார பராமரிப்பில் உத்திர பிரதேச மாநிலமே இந்தியாவுக்கு முன்னோடியாக திகழ்கின்றது என்று நரேந்திர மோடி உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் பெருமையாக பேசி வருகிறார்கள். மேலும் ரூ.196 கோடியில் ராமர் சிலை இதிகாச பாத்திரமான, ராமருக்கு, ரூ. 195 கோடியே 89லட்சம் செலவில் சுமார் 328 அடி உயரத்திற்கு சிலை அமைக்கஉத்தரப்பிரதேச பாஜக […]
நேற்று டெல்லியில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழா நடைபெற்றது .இவ்விழாவில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ”தான் அரசியலுக்கு வந்தது ஒரு மிகப் பெரிய விபத்து எனவும் பிரதமர் பதவிக்கு தன்னை விட பிரணாப் முகர்ஜி தான் பொருத்தமானவராய் இருந்தார் என்றும் அவர் தெரிவித்தார். ஆனாலும் அந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படாததை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், தன்னுடன் சுமூகமாக பிரணாப் முகர்ஜி பழகினார்” என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார். இந்த புத்தக வெளியீட்டு […]
புதுடில்லி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிப்பது குறித்து சுப்ரீம் கோர்ட் இன்று (13ம் தேதி) முக்கிய முடிவு எடுக்கிறது டெல்லி உச்சநீதிமன்றம். கேரளாவிலுள்ள சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலில், பத்து வயதுக்கு உட்பட்ட சிறுமியரும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் மட்டுமே கோயிலுக்குள் செல்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளா இளம் வழக்கறிஞர்கள் சங்கம் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் ‘சபரிமலைக்கு செல்ல, பெண்களுக்கு அனுமதி […]
டெல்லியில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க விதித்த தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் குழந்தைகள் திபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாட முடியாத சுழல் உருவாகி உள்ளது.
புதுச்சேரியில் கரும்புக்கு சரியான கொள்முதல் விலைக்கோரி போராட்டம் நடத்திய கரும்பு விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்தியுள்ளது. போராட்டத்தில் பங்கெடுத்த பல விவசாயிகள் காயமடைந்துள்ளனர் .
வருகிற டிசம்பர் 18ஆம் தேதிக்குள் ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் குஜராத்திற்கு மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இன்று தேர்தல் கமிஷன் ஹிமாச்சல் தேர்தல் அட்டவணையை மட்டும் அறிவித்துவிட்டு, குஜராத் தேர்தலை அறிவிக்கவில்லை. நவம்பர் 9ஆம் தேதி ஹிமாச்சலில் தேர்தல் நடை பெறும் என்றும், ஆனால், வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 18 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி ஒருவர் இது காலம் வரை 6மாத காலத்திற்குள் தேர்தல் நடைபெறும் அனைத்து மாநிலங்களுக்கும் […]
டில்லியில் உள்ள பாஜக சட்டபேரவை உறுப்பினர் ஜிபேஷ் குமார் அவரது வீடு அருகில் உள்ள ரோஹினி செக்டார்-23ல் சென்று கொண்டிருந்த பொது இருசக்கர வாகனத்தில் வந்த இரு மர்மநபர்கள்புதிய ஐஃபோன் 7 ரக மொபைலை பறித்து சென்றனர். ஜிபேஷ் குமார் அவர்களை தடுக்க முயன்றார். ஆனால் மர்ம நபர்கள் தப்பி சென்றுவிற்றனர். இதுகுறித்து காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் பகுதியில் டெங்கு காய்ச்சல் எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டி .சாக்கடை வாளியுடன் கொசு வலையுடன் தெற்கு மண்டல அலுவலகத்தில் புறநகர செயலாளர் பேச்சிமுத்து தலைமையில் மார்க்சிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர் பூமயில்,புறநகர குழு உறுப்பினர் டேனியல் ,வாலிபர் சங்க நிர்வாகிகள் ஆனந்த்,மாரிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர் .
இந்தியன் ரயில்வே பொதுத்துறை நிறுவனத்தில் 2017 ஆம் ஆண்டுக்கான காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது. மொத்த காலிப்பணியிடங்கள்: 4690 பதிவு செய்யும் லிங்: https://goo.gl/et7igJ வேலை: அனைத்து விதமான வேலைகள் பதிவு செய்ய கடைசி நாள் : 29.10.2017
சத்தீஸ்கர் மாநிலத்தில் ராய்பூர் பகுதியில் அரசு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சம்பள உயர்வு,ஓய்வூதியம், பணி நிரந்தரம் போன்ற கோரிக்கைகளை வலியிறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இப்போராட்டத்தில் சுமார் 5000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் பங்கெடுத்து உள்ளனர்.
ரூ.196 கோடியில் ராமர் சிலை இதிகாச பாத்திரமான, ராமருக்கு, ரூ. 195 கோடியே 89லட்சம் செலவில் சுமார் 328 அடி உயரத்திற்கு சிலை அமைக்கஉத்தரப்பிரதேச பாஜக அரசு முடிவு செய்துள்ளது. ராமர் பிறந்தார் என்று கூறப்படும்- உத்தரப்பிரதேச மாநிலம் பைசாபாத் மாவட்டத்தில் உள்ள இடத்திற்கு அருகே சரயூ ஆற்றங்கரையில் சிலை அமைகிறது. உத்தரப்பிரதேச பாஜக அரசின் சிலை அமைக்கும் முடிவுக்கு மோடி அரசு உடனடியாக ஒப்புதல் அளித்திருப்பதுடன், சிலை அமைப்பதற்கான முழுச்செலவையும் ஏற்று, உடனடியாக ரூ. 133 […]
கேரளாவில் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பிஜேபி கட்சி அலுவலகத்தை கேரளா மாநில காவல்துறை மற்றும் வெடிகுண்டு துப்பறியும் குழு நடத்திய சோதனையில் கத்தி,அருவா,வாள் மற்றும் வெடிகுண்டு போன்ற கொடூரமான ஆயுதங்களும் கிடைத்துள்ளன… பிஜேபி கட்சியின் அலுவலகத்திற்குள் எப்படி இந்த ஆயுதங்கள் வந்தன என்பது குறித்து கேரளா காவல்துறை தொடர் விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர்.நேற்றிற்கு முன்தினம் கேரளாவை ஆளும் கட்சி மார்க்சிஸ்ட் கட்சியினர் நடத்திய அமைதி பேரணியில் நாட்டு வெடிகுண்டு விசப்பட்டது. இதனால் பலர் படுகாயம் அடைந்தனர். கடந்த வாரம் […]
குஜராத் சட்டமன்றத்துக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், குஜராத்தில் காங்கிரஸ் சார்பில் பிரசாரத்தை இப்போதே தொடங்கிவிட்டார் ராகுல். இந்நிலையில், குஜராத் மாநிலத்தின் முக்கியமான வர்த்தக நகரான வடோதராவில் (பரோடா) நேற்று தொழில் அதிபர்களுடன் கலந்துரையாடினார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. அதில் பங்கேற்றவர்கள் ராகுல் காந்தியிடம் சில கேள்விகளை முன்வைத்தனர். அப்போது, விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. காரணம், அவர் செல்லுமிடங்களில் எல்லாம், தனது குடும்பமானது தீவிரவாதத்துக்கு பலியாகியிருக்கிறது என்று எப்போதும் […]
மூத்த பத்திரிகையாளர, எழுத்தாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் பிரபல ரவுடிக்கும், அவருடைய கூட்டாளிகளுக்கும் தொடர்பு இருப்பதாக சிறப்பு விசாரணை குழுவினர் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரிய வந்துள்ளது. பெங்களூரூவில் பெண் பத்திரிகையாளரும், எழுத்தாளருமான கவுரி லங்கேசை கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தனர். இந்த கொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை சம்பவம் குறித்து விசாரித்து கொலையாளிகளை பிடிக்க சிறப்பு விசாரணைக்குழு […]
நேற்று காலை குஜராத்தில் உள்ள தனது சொந்த ஊரான வாட் நகரில் தொல்லியல் துறை நடத்திக்கொண்டிருக்கிற அகழாய்வுப்பணியை பார்வையிட்டார் பிரதமர் நரேந்திர மோடி. அதன்பின் அங்கு ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். ”வாட்நகரின் பழைய பெயர் ஆனந்தபூர். இங்கு அகழாய்வு செய்யவேண்டும் என்று நான் கூறினேன். அதனை மத்தியத் தொல்லியல் துறையினர் சிறப்பாக செய்துள்ளனர். இங்கு 2500 ஆண்டுகளுக்கு முன்பு பெரியநகரம் இருந்திருக்கிறது. அது அழிந்துவிடாமல் தொடர்ந்து இருந்துள்ளது. இந்நகருக்கு சீனாவில் இருந்து யுவான்சுவாங் வந்துள்ளார். பெருமைகொண்ட […]
அருணாச்சல பிரதேசத்தில் நேற்று முன்தினம் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த இராணுவ வீரர்களின் உடல்கள். சவப்பெட்டி கூட இல்லாமல் அட்டைப் பெட்டிகளில் அடக்கம் செய்திருக்கிறது மத்திய அரசு….. ராமருக்கு கோவில் கட்ட பல்லாயிரம் கோடி,சர்தார் வல்லபாய் படேலுக்கு சிலை அமைக்க 5000 கோடி,சத்திரபதி சிவாஜிக்கு சிலை அமைக்க 2500 கோடி,இந்து மத காவியங்களில் இருக்ககூடிய மரணமில்லா வாழ்வினை அளிக்ககூடியதாக கருதப்படுகிற புஷ்பாஞ்சலியை கண்டு பிடிக்க 85 கோடி ரூபாயை ஒதுக்கிருக்கிறது மத்திய பிஜேபி அரசு… ஆனால் நாட்டின் பாதுகாப்பு […]