Author: கெளதம்

சென்னை விமான நிலையத்தில் இருந்து மும்பை புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

இந்தியா கூட்டணி கட்சிகளின் 3வது ஆலோசனை கூட்டம் மும்பையில் இன்று மாலை தொடங்குகிறது. இந்நிலையில், எதிர்கட்சிகளின் 3வது ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க, சென்னை விமான நிலையத்தில் இருந்து மும்பை புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். முதல்வர் ஸ்டாலினுடன் நாடாளுமன்ற குழுத் தலைவருமான டி.ஆர்.பாலுவும் மும்பை செல்கிறார். இன்று மாலை நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்றபின், சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே அளிக்கும் விருந்தில் பங்கேற்கிறார். பின்னர், நாளை நடைபெறும் கூட்டத்திலும் பங்கேற்றபின் மும்பையில் இருந்து புறப்பட்டு இரவு சென்னை […]

3 Min Read
MKStalin

சென்னை மெட்ரோ சேவையுடன் புறநகர் பறக்கும் ரயில் சேவை இணைப்பு!

சென்னை மெட்ரோ ரயில் சேவையுடன் புறநகர் பறக்கும் ரயில் சேவை விரைவில் இணைக்கப்பட உள்ளது. சென்னை மாநகரப் பகுதிகளில் கடற்கரை முதல் வேளச்சேரி வரை பறக்கும் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அதற்கான வரைவு புரிந்துணர்வு ஒப்பந்தம் ரயில்வே வாரியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  மெட்ரோ ரயில் நிலையங்களைப்போல, சென்னை புறநகர் பறக்கும் ரயில் நிலையங்களை மறுசீரமைப்பு செய்ய சிஎம்டிஏ முடிவு செய்துள்ளது. இதன் விரிவாக்கம் பணி கடந்த 2008 ஆம் ஆண்டு ரூ.495 கோடி செலவில் […]

2 Min Read
Madurai Metro

தமிழகத்தில் நாளை முதல் சுங்க கட்டணம் உயர்வு!

தமிழகம் முழுவதும் மொத்தம் 54 சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில், சில சுங்கச்சாவடிளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் கட்டணம் உயர்த்தப்பட்டது. 2023-ம் ஆண்டுக்கான புதிய கட்டண உயர்வு தமிழகம் முழுவதும் மீதமுள்ள 20 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1-ம் தேதி நள்ளிரவு முதல் அமல்படுத்தப்படுகிறது. இந்நிலையில், நாளை முதல் திண்டுக்கல், திருச்சி, சேலம், மேட்டுப்பட்டி, உளுந்தூர்பேட்டை, மதுரை, தூத்துக்குடி உட்பட 20 சுங்கச்சாவடிகளில் இது நடைமுறைக்கு வருகிறது. பாஸ் டேக் இல்லாத வாகனங்கள் இருமடங்கு கட்டணம் செலுத்த வேண்டும் என […]

3 Min Read
toll

காலை உணவு திட்டம் – தெலுங்கானா குழு தமிழ்நாடு வருகை!

தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ள காலை உணவு திட்ட செயல்பாடுகளை தெரிந்துகொள்ள 5 பேர் கொண்ட தெலுங்கானா குழுவினர் தமிழகம் வந்துள்ளது. நாளை சென்னை ராயபுரத்தில் உணவு தயாரிக்கும் கூடத்திற்கு சென்று இவர்கள் ஆய்வு செய்கின்றனர். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் வரும் கல்வியாண்டு முதல் 31,008 அரசு பள்ளிகளில் பயிலும் 15,75,000 மாணவர்கள் பயன்பெறும் வகையில் ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ கடந்த 25ம் தேதி கலைஞர் படித்த திருக்குவளை பள்ளியில் உணவு பரிமாறி […]

3 Min Read
Minister Udhayanidhi stalin - MDMK Party Leader Vaiko

#Chandrayaan-3: மீண்டும் விக்ரம் லேண்டரை கிளிக் செய்தது பிரக்யான் ரோவர்!

கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் பல்வேறு கட்டங்களாக பூமி மற்றும் நிலவை சுற்றி வந்தநிலையில், வெற்றிகரமாக நிலவில் இறங்கி வரலாற்று சாதனை படைத்தது. லேண்டரானது நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய பின், லேண்டர் உட் பகுதியில் இருந்து வெளிவந்த ரோவர் வாகனம் நிலவில் தரையிறங்கி நிலவில் ஒரு நிலவு நாள் (14 நாட்கள்) ஆயுள்காலத்தில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது. இந்நிலையில், ரோவர் மேற்கொள்ளும் ஒவ்வொரு அப்டேட்களையும் இஸ்ரோ நிறுவனம் வெளியிட்டு வருகிறது. தற்போது, […]

5 Min Read
ISRO

தமிழ்நாட்டில் இன்று 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் இன்றும், நாளை (செப்-1ம் தேதி) என அடுத்தடுத்த நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று (31.08.2023) தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, […]

3 Min Read
Rain in chennai

#Speaking4India: தெற்கில் இருந்து வரும் குரலுக்காக காத்திருங்கள் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

I.N.D.I.A. கூட்டணி கட்சிகளின் 3வது ஆலோசனை கூட்டம் இன்று தொடங்க உள்ள நிலையில், ‘Speaking4India’ என்ற பெயரில் நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆடியோ பரப்புரையை தொடங்கியுள்ளார் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின். (PODCAST) ஆடியோ சீரிஸ் மூலம் மக்களுடன் ஸ்டாலின் உரையாட உள்ளதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோவை தனது X தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் முதல்வர் பேசுகையில், இந்தியாவை பாஜக அரசு எப்படி எல்லாம் உருக்குலைத்தார்கள் என பேச வேண்டி உள்ளது, எதிர்காலத்தில் நாம் கட்டமைக்க […]

3 Min Read
Tamilnadu CM MK Stalin

இந்தியா கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று மும்பை பயணம்!

இந்தியா கூட்டணி கட்சிகளின் 3வது ஆலோசனை கூட்டம் மும்பையில் இன்று தொடங்குகிறது. இந்நிலையில், இந்தியா கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று காலை மும்பை புறப்பட்டுச் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று மாலை நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்றபின், சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே அளிக்கும் விருந்தில் பங்கேற்கிறார். முதல்வர் ஸ்டாலினுடன் நாடாளுமன்ற குழுத் தலைவருமான டி.ஆர்.பாலுவும் மும்பை செல்கிறார். மேலும், நாளை நடைபெறும் கூட்டத்திலும் பங்கேற்றபின் மும்பையில் இருந்து புறப்பட்டு இரவு சென்னை திரும்புகிறார். 2 நாள்கள் […]

3 Min Read
Tamilnadu CM MK Stalin

ஜவான் மேடையில் லியோ: கொளுத்திப்போட்ட பிரியாமணி! பேசவிடாமல் செய்த அந்த சம்பவம்!

நடிகர் ஷாருக்கான் நடிப்பில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள “ஜவான்” திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 7-ஆன் தேதி, தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், ஜவான் படம் வெளியாக இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஜவான் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் ஷாருக்கான், அட்லீ, அனிருத், விஜய்சேதுபதி […]

4 Min Read
JawanPreRelease event - Priyamani

நெல்சனுக்கு அடித்த ஜாக்பாட்…இந்த முறை கம்மி! அடுத்த முறை 50 கோடிக்கும் மேல கன்பார்ம்!

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியான ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வசூலை குவித்து வருகிறது. 3 வாரங்கள் ஆகியும் படம் நல்ல வரவேற்பை பெற்று படத்தை பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்கிற்கு சென்று வருகிறார்கள். இந்த திரைப்படம் ரூ.600 கோடியை நெருங்கி இருக்கும் நிலையில், படத்தின் தாயரிப்பாளர்கள் மிகவும் குஷியாகியுள்ளார்கள். இதனால், இயக்குனர் நெல்சனின் சம்பளம் பெரிதும் உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நெல்சனுக்கு முந்திய திரைப்படமான பீஸ்ட் […]

4 Min Read
rajini and nelson vijay

களைகட்டும் ‘ஜவான்’ ப்ரீ ரிலீஸ் விழா: ஷாருக்கான் வருகை கண்டு அரங்கமே அலறல்!

‘ஜவான்’ படத்தின் ப்ரீ-ரிலீஸ் விழாவில் ஷாருக்கான், நயன்தாரா, அட்லீ, விஜய் சேதுபதி மற்றும் அனிருத் ஆகியோர் கலந்து கொண்டதால் அரங்கமே திருவிழா போல் கலைக்கட்டியுள்ளது. நடிகர் ஷாருக்கான் நடிப்பில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள “ஜவான்” திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 7-ஆன் தேதி, தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தில் ஷாருக்கானுடன் நயன்தாரா, பிரியாமணி, யோகி பாபு, சிமர்ஜீத் சிங் நாக்ரா, அஸி பாக்ரியா, மன்ஹர் […]

5 Min Read
JawanPreReleaseEvent

கோவிலுக்குச் செல்லும் வழியில் மினி லாரி மீது கார் மோதியதில் 3 பேர் பலி !

குஜராத்தின் பதான் மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் மினி டிரக் மீது கார் மோதியதில் 3 பேர் சம்பவ இடத்தில் பலியாகினர். சுரேந்திரநகர் மாவட்டத்தில் உள்ள சோட்டிலா நகரத்திற்கு ஒரு கோவில் பிரார்த்தனைக்கு சென்று கொண்டிருந்த போது, சாமி-சங்கேஷ்வர் மாநில நெடுஞ்சாலையில் அவர்களது கார் சென்றுகொண்டிருக்கையில், பின்னால் வந்த மினிலாரி மீது கார் மோதி அதிகாலை 3 மணியளவில் விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. உயிரிழந்தவர்கள் ஹஸ்முக் தக்கர் (36), பிந்து ராவல் (27) மற்றும் தஷ்ரத் ராவல் (26) என […]

2 Min Read
Accident

நாங்கெல்லாம் கருஞ்சிறுத்தை…! ஊருக்குள் புகுந்த சிறுத்தையுடன் செல்ஃபி எடுத்த பொதுமக்கள்…

மத்தியப் பிரதேசத்தின் இக்லேராவைச் சேர்ந்த கிராமவாசிகள் சிறுத்தையை துன்புறுத்தும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்டத்தில் உள்ள இக்லேரா அருகே உள்ள வனப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டது. இந்நிலையில், முதலில் கிராமவாசிகள் சிறுத்தையை பார்த்ததும் பயந்தனர், ஆனால் பின்னர் சிறுத்தை ஆக்ரோஷமாக இல்லாமல் சோம்பலாக இருப்பதைப் பார்த்தபோது, ​​அது உடம்பு சரியில்லை என்று புரிந்து கொண்டனர். கிராம மக்கள் சிறுத்தையை சுற்றி வளைத்து விளையாட ஆரம்பித்தனர். சிறுத்தையுடன் விளையாட்டுத்தனமான செல்யல்களில் ஈடுபட்டதுடன், […]

4 Min Read
Sick leopard

அடுத்த 3 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தின் திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பூர், நீலகிரி, கோவை, நாமக்கல், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் இன்றும், நாளை மற்றும் நாளை […]

2 Min Read
Rain

ஜி20 மாநாடு: குரங்குகளை விரட்ட குரங்கின் கட்-அவுட் வைத்த மாநகராட்சி!

புது டெல்லியில் வருகின்ற செப்டம்பர் 9 முதல் 10 வரை நடைபெறவுள்ள ஜி20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்நிலையில், டெல்லி அரசு மத்திய அரசுடன் இணைந்து, நடைபெறவிருக்கும் உலக அளவிலான கூட்டத்தை முன்னிட்டு, தேசிய தலைநகரை அழகுபடுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, G20 உச்சி மாநாட்டிற்கு சர்வதேச பிரமுகர்கள் வருகை தரும் இடங்களுக்கு அடிக்கடி வரும் குரங்குகளின் பயமுறுத்துவதே தடுக்க லங்கூர் குரங்கின் உருவ கட்அவுட்களை வைக்கப்பட்டுள்ளது. டெல்லியின் சர்தார் படேல் […]

3 Min Read
G20 Summit - langur cutouts

‘ஜவான்’ இசை வெளியீட்டு விழா! அமெரிக்காவில் இருந்து ரிட்டனாகும் தளபதி விஜய்?

‘லியோ’ படத்திற்குப் பிறகு அவரது அடுத்த படமான ‘தளபதி 68’ படத்திற்காக இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் விஜய் கைகோர்த்துள்ளார், மேலும் படத்திற்கான முக்கியமான வேலைகளுக்காக படக்குழு சமீபத்தில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸுக்கு பறந்தது. இந்த படத்தில் விஜய் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது. இதனால், அங்கு இந்த படத்திற்கான நவீன தொழில்நுட்பத்தில் லுக் டெஸ்ட் எடுக்க விஜய் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றதாக கூறப்பட்டது. தற்போது, ‘தளபதி 68’ படத்திற்கான வேலைகளை விஜய் அவசரமாக முடித்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், […]

5 Min Read

வெளுத்து வாங்க போகும் கனமழை: 3 நாட்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!

தமிழ்நாட்டில் இன்றும், நாளை மற்றும் நாளை மறுநாள்  (செப்.,1ம் தேதி) என அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும், சென்னையில் இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவித்துள்ளது தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று […]

4 Min Read
rain

‘புஷ்பா-புஷ்பா ராஜ்’ அல்லு அர்ஜூனின் லேட்டஸ்ட் லுக் இணையத்தில் வைரல்!

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை திரைப்படம் தான் புஷ்பா. இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம், ஆகிய மொழிகளில் வெளியாகி வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் ஆனது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்த இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து படத்தின் இரண்டாவது பாகம் உருவாகி வருகிறது. சமீபத்தில், புஷ்பா படத்தில் நடித்ததற்காக சிறந்த […]

4 Min Read
alluarjun

மணிப்பூரில் ஏற்பட்ட புதிய வன்முறையில் குக்கி-ஜோ சமூகத்தை சேர்ந்த ஒருவர் பலி!

மணிப்பூரின் கொய்ரென்டாக் கிராமத்தில் நேற்று ஏற்பட்ட புதிய வன்முறையில் ஒருவர் பலியாகியுள்ளார். விவரங்களின்படி, நேற்று காலை 10 மணியளவில் குக்கி-ஸோ சமூகத்தை சேர்ந்தவர்களை நோக்கி குற்றவாளிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், முப்பது வயதான ஜங்மின்லுன் காங்டே என்பவர்  கொல்லப்பட்டார். இதற்கிடையில், வெவ்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நான்கு தீவிரவாதிகள் தனித்தனி நடவடிக்கையின் போது, கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்களிடமிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டதாக போலீசார் நேற்று தெரிவித்தனர். ஆகஸ்ட் 27 அன்று (ஞாயிற்றுக்கிழமை), மணிப்பூரின் தலைநகரான […]

3 Min Read
Manipurwomankilled

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு!

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்தது. அந்த வகையில், நேற்று தங்கம் விலை குறைந்த நிலையில், இன்று சாற்று அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய விலையில் இருந்து கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 5,530 ரூபாய்க்கும், சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரண் 44,240 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை, ஒரு கிராம் 80 ரூபாய் 70 காசுகளுக்கும் , […]

2 Min Read
gold