‘ஜவான்’ இசை வெளியீட்டு விழா! அமெரிக்காவில் இருந்து ரிட்டனாகும் தளபதி விஜய்?

‘லியோ’ படத்திற்குப் பிறகு அவரது அடுத்த படமான ‘தளபதி 68’ படத்திற்காக இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் விஜய் கைகோர்த்துள்ளார், மேலும் படத்திற்கான முக்கியமான வேலைகளுக்காக படக்குழு சமீபத்தில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸுக்கு பறந்தது. இந்த படத்தில் விஜய் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.
இதனால், அங்கு இந்த படத்திற்கான நவீன தொழில்நுட்பத்தில் லுக் டெஸ்ட் எடுக்க விஜய் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றதாக கூறப்பட்டது. தற்போது, ‘தளபதி 68’ படத்திற்கான வேலைகளை விஜய் அவசரமாக முடித்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில், கையில் சூட் கேஸுடன் நிற்கும் விஜய்யின் போட்டோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதற்கிடையில், சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் இன்று (ஆகஸ்ட் 30) மாலை நடக்கவிருந்த ஷாருக்கானின் ‘ஜவான்’ ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு விஜய் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, விஜய் லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்திலிருந்து திரும்பிகிறதை சமீபத்திய வைரல் புகைப்படம் காட்டுகிறது.

ஏற்கனவே, விஜய் இந்த படத்தில் கேமியா ரோலில் நடித்ததாக தகவல் வெளியானது. இதனை வைத்து பார்க்கும் பொழுது, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இன்று பிற்பகல் 3 மணிக்கு பிரமாண்ட நிகழ்வு ஆரம்பமாகவுள்ள நிலையில், உண்மைகளை அறிய இன்னும் சில மணி காத்திருப்போம்.
சில முன்னணி கோலிவுட் நட்சத்திரங்களும் இன்று சென்னையில் நடைபெறும் ‘ஜவான்’ ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விழாவை தொடர்ந்து, ‘ஜவான்’ படக்குழு நாளை (ஆகஸ்ட் 31) துபாய் செல்கிறது. மேலும் படத்தின் டிரெய்லரை துபாயில் உள்ள பிரபல கட்டிடமான புர்ஜ் கலீஃபாவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ‘ஜவான்’ திரைப்படம் செப்டம்பர் 7 ஆம் தேதி பெரிய திரைகளில் வருகிறது.