சென்னையில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்திற்கு ஆதரவாக செயல்படுகிறார்களா என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் சோதனை. சென்னையில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்திற்கு ஆதரவாக செயல்படுகிறார்களா என்ற சந்தேகத்தின் பேரில், போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, சென்னை கொடுங்கையூர், மண்ணடி உள்ளிட்ட இடங்களில் காலை முதல் போலீஸ் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கொடுங்கையூரில் முகமது தப்ரீஸ் என்பவர் வீட்டில் துணை ஆணையர் தலைமையில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் வாழ்த்து. மத்திய அரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் 2022-ஆம் ஆண்டிற்கான தேசிய விளையாட்டு விருதுகளை நேற்று அறிவித்தது. அந்த வகையில், தமிழகத்தைச் சேர்ந்த இளம் சதுரங்க விளையாட்டு வீரர் பிரக்ஞானந்தா மற்றும் துப்பாக்கிச் சுடுதல் வீராங்கணை இளவேனில் வாலறிவனுக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது […]
தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் நடிகரும், நடிகர் மகேஷ்பாபுவின் தந்தையுமான கிருஷ்ணா காலமானார். தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் நடிகரும், நடிகர் மகேஷ்பாபுவின் தந்தையுமான கிருஷ்ணா, ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக நேற்று அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், இன்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் பல்வேறு மொழிகளில் 350-க்கும் மேற்பட்ட மொழிகளில் நடித்துள்ள நிலையில், இவர் பத்ம […]
திருமணம் செய்ய மறுத்ததால் காதலியை 35 துண்டுகளாக வெட்டிய காதலன். மும்பையைச் சேர்ந்தவர் அஃப்தப் அமீன் பூனாவாலா. இவர் பிரபல கால் சென்டர் ஒன்றில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அவருடன் பணியாற்றி வந்த ஷ்ரத்தா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில், இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதனை எடுத்து இந்த காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வந்த நிலையில், பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர். பெண் வீட்டாரின் எதிர்ப்பை தொடர்ந்து, இருவரும் திருமணம் […]
அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகள் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுத்திருந்தால் ஏன் இந்த நிலை இன்று ஏற்பட்டு இருக்க போகிறது அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேட்டி. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், இன்று சென்னையில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்தார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், திமுக அரசு தண்ணீர் எங்கும் தேங்கவில்லை என்று தவறான செய்தியை கூறி வருகிறது என தெரிவித்திருந்தார். இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் தா.மோ.அன்பரசன், சென்னையில், தண்ணீர் […]
சென்னை, அம்பத்தூர் அருகே மீன்தொட்டியில் விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு. சென்னை, அம்பத்தூர் அருகே வெங்கடாபுரம் வன்னியர் தெருவை சேர்ந்தவர்கள் யுவராஜ் – கௌசல்யா தம்பதியினர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் மீனாட்சி என்ற குழந்தை உள்ளது. இந்த குழந்தை, கையில் வைத்திருந்த விளையாட்டு பொருள், அவர்களது வீட்டில் இருந்த மீன் தொட்டியில் தவறி விழுந்துள்ளது. அதனை எடுக்க சென்ற குழந்தை மீனாட்சி மீன் தொட்டிக்குள் தலைகீழாக விழுந்துள்ளார். குழந்தை விழுந்து சிறிது நேரம் கழித்து தான் […]
வெள்ளத் தணிப்பு – அகற்றும் பணிகளைக் கவனமாகவும் துரிதமாகவும் செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளேன் என முதல்வர் ட்வீட். தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 122 ஆண்டுகளில் இல்லாத அளவாக 44 செ.மீ மழை ஒரே நாளில் பதிவானது. இந்த நிலையில், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மழை பாதித்த பகுதிகளை ஆய்வு செய்தார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் […]
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஓபிஎஸ் வாழ்த்து தெரிவித்து ட்வீட். இன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்படும் நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், ஓபிஎஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், ‘பெற்றோரைக் காட்டிலும் பிள்ளைகள் அறிவில் சிறந்து விளங்கினால் அது பெற்றோருக்கு மட்டுமின்றி உலகத்தாருக்கும் மகிழ்ச்சியைத் தரும் என்றார் வள்ளுவப் பெருந்தகை. வள்ளுவரின் வாய்மொழிக்கிணங்க அறிவாற்றலுடன், பிறரிடம் அன்பு கொள்ளுதல், தமிழ் […]
பயிர் காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என ஜி.கே.வாசன் அறிவுறுத்தல். தமிழ்நாட்டில் பிரதமர் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சம்பா நெற்பயிருக்கு காப்பீடு செய்வதற்கான காலக்கெடு நாளையுடன் நிறைவடைவதாக தமிழக வேளாண் துறை அறிவித்துள்ளது. இதனையடுத்து, ஜி.கே.வாசன் அவர்கள் பயிர் காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழக அரசு, விவசாயிகள் பயிர்காப்பீடு செய்வதற்கான தேதி முடிவடையும் வேளையில் அதற்கான காலக்கெடுவை நீட்டித்து விவசாயிகள் பயன்பெற வழி […]
இன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்படும் நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘அளவற்ற ஆர்வம், அற்புதமான அறிவாற்றல் அபரிமிதமான ஆளுமை, ஆக்கபூர்வ சிந்தனை, அகலாத கவனம், என்று இந்தக்காலக் குழந்தைகள் அனைவரும் சாதனைகள் படைப்பதற்காகவே ஆண்டவனால் படைக்கப்பட்டிருப்பதாக உணர்கிறேன். எல்லாக் குழந்தைகளும், ஒரு சாதனைக் கனவுடன் காத்திருக்கிறார்கள். இதில் வியக்க வைக்கும் உண்மை என்னவெனில், குழந்தைகள் அனைவரும், தனித் திறத்துடன், தனித் தன்மையுடன், தணியாத ஆர்வத்துடன், தனித்துவம் […]
தமிழ்நாட்டு நலன் பாதிக்கப்படுகின்ற விஷயங்களில் மத்திய அரசை எதிர்த்து குரல் கொடுப்போம் என டிடிவி தினகரன் பேட்டி. அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டு நலன் பாதிக்கப்படுகின்ற விஷயங்களில் மத்திய அரசை எதிர்த்து குரல் கொடுப்போம்; அனைத்து விஷயங்களிலும் எதிர்த்து பேசுவது முறையானது அல்ல என தெரிவித்துள்ளார். நளினி உள்ளிட்ட 6 பேரை உச்சநீதிமன்றம் விடுதலை செய்ததை வரவேற்கிறோம்; 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள […]
விவசாயிகளுக்கு மழையால் ஏற்பட்டுள்ள சேதங்களை கணக்கெடுத்து நிவாரணம் வழங்க விரைந்து நடவடிக்கை வேண்டும் என மநீம வலியுறுத்தல். விவசாயிகள் வரலாறு காணாத மழையால் பரிதவித்து வரும் நிலையில், சேதங்களை கணக்கெடுத்து நிவாரணம் வழங்க விரைந்த நடவடிக்கை வேண்டும் என்று மநீம வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், பல்வேறு இடங்களில் மரங்கள், மின் கம்பங்கள் முறிந்து விழுந்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகளை தமிழக அரசு துரிதப்படுத்த வேண்டும். பேரிடர் […]
திருச்சி சிறப்பு முகாமில், முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 4 பேருக்கும் போதுமான அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது என ஆட்சியர் பிரதீப் குமார் பேட்டி. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 31 ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பின், 7 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட நிலையில், மீதமுள்ள 7 பேரும் கடந்த இரு தினங்களுக்கு முன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், விடுதலை […]
இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய […]
கனமழை காரணமாக சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறையை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பருவமழை தொடங்கிய நிலையில், பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கனமழை காரணமாக சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறையை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளில் தேங்கி நிற்கும் மழை நீர் பம்ப்செட் மோட்டார் மூலம் வெளியேற்றும் பணி நடைபெற்று வருவதால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், காஞ்சிபுரம் மாவட்டம் […]
உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் இன்று பதவியேற்பு. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் யு.யு.லலித்தின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதனையடுத்து, உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் இன்று பதவியேற்கிறார். புதிதாக பொறுப்பேற்கும் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். இதன் மூலம் நாட்டின் 50-வது தலைமை நீதிபதியாக சந்திரசூட் பதவியேற்பார். 50 வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க இருக்கும் டி ஒய் சந்திரசூட் 2024-ம் ஆண்டு […]
டெல்லியில் காற்றின் தரம் மேம்பட்டுள்ளதால் இன்று முதல் தொடக்க பள்ளிகளை திறக்க டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் சமீப நாட்களாக காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டது. இந்த நிலையில், காற்றின் தரத்தை மேம்படுத்த டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், காற்று மாசுபாடு காரணமாக கடந்த 5-ஆம் தேதி முதல், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளித்து டெல்லி முதல்வர் உத்தரவிட்டு இருந்தார். இந்த நிலையில், தற்போது டெல்லியில் காற்றின் தரம் […]
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அன்புமணி ராமதாஸ். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்துள்ளார். அந்த பதிவில், ‘நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல உடல் நலத்துடன், […]
கடலூர், விருத்தாசலத்தில் நிழற்குடை அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கி இருந்த நீரில் வினோத் என்ற சிறுவன் விழுந்து உயிரிழப்பு. கடலூர், விருத்தாசலத்தில் நிழற்குடை அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் நீர் தேங்கி இருந்துள்ளது. இந்த நிலையில், அந்த பள்ளத்தில் தேங்கி இருந்த நீரில் 11 வயது சிறுவன் வினோத் என்பவர் விழுந்த நிலையில், அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சிறுவன் வினோத், விஜய மாநகரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஜெயமூர்த்தி என்பவரின் மகன். வினோத் உயிரிழந்த நிலையில் போலீசார் விசாரணை […]
அரசு பள்ளி என்பது வறுமை அடையலாம் அல்ல, பெருமை அடையாளம் என அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் இன்று கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றியவர், தமிழக முதல்வர் கல்வி மருத்துவம் ஆகிய இரண்டிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். மற்ற நாடுகள் நம்மை பார்த்து பயப்படுகிறார்கள். நம்மிடம் உள்ள ஆயுதத்தை பார்த்து அல்ல. நம்மிடம் உள்ள இளைய சமுதாயத்தை பார்த்து தான். […]