தனியார் நிறுவன ஊழியர்களை மிரட்டிய திமுக எம்.எல்.ஏ எஸ்.ஆர்.ராஜாவின் செயலுக்கு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம். திமுக எம்.எல்.ஏ எஸ்.ஆர்.ராஜா அண்மையில் ஒரு தனியார் நிறுவனத்திற்கு சென்று அங்குள்ள ஊழியர்களை மிரட்டும் வீடியோ வெளியாகி பெரும் வைரலானது. அதில் தனியார் நிறுவன ஊழியர்களை மிரட்டும் தொனியில் எம்.எல்.ஏ எஸ்.ஆர்.ராஜா பேசியிருப்பார். அதுகுறித்து, தனது கண்டங்களை ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதில் குறிப்பிடுகையில், ‘ அரசு அதிகாரிகளை மிரட்டுவது, காவல் துறையினரை மிரட்டுவது, ஒப்பந்ததாரர்களை மிரட்டுவது, அரசாங்க அலுவலகங்களின் […]
முழு அடைப்பின் போது அரங்கேறிய கல்வீச்சு, பேருந்துகள் சேதம் உள்ளிட்ட சம்பவங்களுக்கு எதிராக கண்டங்களை பதிவு செய்துள்ளது கேரள உயர்நீதிமன்றம். மேலும் பொதுச்சொத்துக்களை சேதமடையாமல் பார்த்துக்கொள்ள கேரள காவல்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ நேற்று நாடு முழுவதும் சோதனை நடத்தியது. பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்.டி.பி.ஐ அலுவலகங்களில் தான் இந்த சோதனைகள் நடைபெற்றது. அதன் முக்கிய நிர்வாகிகள் 100க்கும் அதிமானோர் கைது செய்யப்பட்டனர். இந்த சோதனை மற்றும் கைது நடவடிக்கை […]
நாடுமுழுவதும் என்.ஐ.ஏ அமைப்பினர் நடத்திய சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாப்புலர் பிரண்டு ஆப் இந்தியா அமைப்பினர் நடத்தும் கடையடைப்பு போராட்டத்தில் பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டதால், தமிழக பேருந்துகள் கேரளாவுக்கு செல்லவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ நேற்று நாடு முழுவதும் சோதனை நடத்தியது. பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்.டி.பி.ஐ அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெற்றது. அதன் முக்கிய நிர்வாகிகள் 100க்கும் அதிமானோர் கைது செய்யப்பட்டனர். இந்த சோதனை மற்றும் கைது நடவடிக்கை […]
உரிய முறைப்படி வசித்து வரும் குடியிருக்கும் வாசிகள் நிலங்களை அவசரகால உத்தரவு என அவர்களின் நிலங்களை கையகப்படுத்துவது தவறு- மதுரை உயர்நீதிமன்றம் கருத்து. தஞ்சாவூரில் விமான படை பயிற்சி தளம் அமைப்பதற்காக, தேவைப்பட்ட அப்பகுதி நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இதற்காக மாற்று இடம் கேட்டு, நிலத்தை கொடுத்தவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதற்காக, அவசரகால தேவை என ஏற்கனவே குடியிருக்கும் குடியிருப்புவாசிகளின் நிலங்களை கையகப்படுத்த உத்தரவு பிறப்பித்து இருந்தார் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர். இதனை எதிர்த்து, மதுரை உயர்நீதிமன்றத்தில், வழக்கு தொடரப்பட்டிருந்தது. […]
திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மீதான நில அபகரிப்பு வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 1995ஆம் ஆண்டு குரோம்பேட்டையில் அமைந்துள்ள குரோம்பேட்டை லெதர் ஃபேக்டரியை தற்போதைய அரக்கோணம் எம்.பி ஜெகத்ரட்சகன் வாங்கியது தொடர்பாக புகார் எழுந்தது. குவிந்தன் தாசன் என்பவர் நிலஅபகரிப்பு அடிப்படியில் கொடுத்த புகாரின் பேரில் சிபிசிஐடி போலீசார் 2 வழக்குகள் பதிந்து வழக்கை விசாரணை செய்து வந்தனர். இந்த வழக்குகளை ரத்து செய்ய கோரி திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு […]
தமிழ்நிலம் எனும் இணையதளம் மூலம் பட்டா மாறுதல்களுக்கு இணையத்தளத்தில் விண்ணப்பித்து கொள்ளலாம். இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கபட்டுள்ள்ளது. சொத்து வாங்குபவர்கள் அந்த சொத்தை தன் பெயருக்கு பத்திரப்பதிவு செய்த உடன், அடுத்தபடியாக, அந்த சொத்தின் பட்டாவை மாற்றம் செய்ய வேண்டும். வாங்கப்பட்டு சொத்து எந்த தாலுகா எல்லைக்கு உட்பட்டது, என்பதை அறிந்து, அந்த பகுதி தாலுகா அலுவலகத்தில் பட்டா மாற்றத்துக்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான விண்ணப்பங்கள் மட்டுமே இணையதளத்தில் கிடைக்கின்றன. தற்போது […]
துறைமுக மசோதா 2022இல் குறிப்பிட்டுள்ள அம்சங்கள் மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் வகையில் அமைந்துள்ளது. அந்த அம்சங்களை நீக்க கோரி முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதியுள்ளார். அதில் புதியதாக கூறப்பட்டுள்ள துறைமுக மசோதா பற்றியும் அதில் உள்ள அம்சங்கள் பற்றியும் கோரிக்கைளை வைத்துள்ளார். அதில், ஸ்டாலின் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ‘ இந்திய துறைமுகங்கள் மசோதா 2022இல் உள்ள அம்சங்கள் மாநில அரசின் உரிமைகளை […]
பணவீக்கமானது மற்ற மாநிலங்களில் 7 சதவீதத்திற்கும் மேல் உள்ளது. ஆனால், தமிழகத்தில் அது 5ஆக குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கான கடனை குறைத்துள்ளோம். என பல்வேறு நிதி நிலைமையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று அளித்த பேட்டியில், தமிழ்நாட்டின் நிதிநிலையை மக்களுக்கு எடுத்துரைத்தார். அதில் பல்வேரு முக்கிய நிதி அம்சங்கள் இடம் பெற்று இருந்தன. அதில்,, ‘ தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை தற்போது வெகுவாக குறைந்துள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஒத்துழைப்பு […]
2400 கோடி செலவில் மேம்படுத்தப்படும் சென்னை விமான நிலைய பணிகள் விரைவில் நிறைவடைந்து வரும் டிசம்பர் இறுதியிலோ அல்லது ஜனவரி மாதத்திலோ பிரதமர் மோடி சென்னை வருகை புரிந்து திறந்து வைப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. சென்னை, மீனம்பாக்கத்தில் அமைந்துள்ள விமானநிலையத்திற்கு அன்றாடம் பயணிகளின் வரத்தும், விமானங்களின் வரத்தும் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை சரிப்படுத்த, விமான நிலைய விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக 2,400 கோடி செலவில் விமான நிலையத்தில் முனையங்கள் கட்டப்பட்டு வருகின்றன. […]
நாடு முழுவதும் நேற்று நடைபெற்ற என்.ஐ.ஏ சோதனை குறித்து பேசிய ராகுல் காந்தி, ‘ மதவாதமும், வன்முறையும் எந்த வடிவில் இருந்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாது.’ என தனது கண்டனத்தை தெரிவித்தார். தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா, எஸ்டிபிஐ அலுவலகம் மற்றும் அதன் முக்கிய நிர்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ அதிரடி சோதனையில் நேற்று முன்தினம் இரவு முதல் ஈடுபட்டது. பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டிய புகாரில் தமிழகத்தில் 10 பேர் உள்பட […]
கன்னியாகுமரியில் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதாக முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டி இருந்தார். இது குறித்து பொது மேடையில் விவாதிக்க தயார் என தமிழக அமைச்சர் மனோஜ் தங்கராஜ் பதில் கூறியுள்ளார். கன்னியாகுமரியில் நடைபெற்று வரும் கனிம வள கொள்ளையில் அமைச்சர் மனோஜ் தங்கராஜ் பெயர் சரித்திரத்தில் நிலைத்து இருக்கும் என முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அண்மையில் குறிப்பிட்டு இருந்தார். மேலும், தமிழகத்தில் பொறுப்பில் உள்ளவர்கள் அவர்கள் கடமையை […]
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இருந்தது போல, பெட்ரோல், டீசல் விலையை பாஜக அரசு குறைத்துவிட்டால் அண்ணாமலைக்கு ஆட்டுக்குட்டி பரிசாக வழங்கப்படும் என தமிழக காங்கிரஸார் நூதன எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில், தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஒரு சுவாரஸ்ய அறிவிப்பு ஒன்று வெளியானது. அதாவது, அக்கூட்டத்தில், மத்தியில் ஆளும் பாஜக அரசு, சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் […]
விழுப்புரத்தில், ஆ.ராசா பற்றிய கேள்விக்கு மதுரை ஆதீனம் பதில் அளிக்க மறுத்து, என்னை வம்பில் மாட்டிவிட பாக்குறீங்களா என அங்கிருந்து சென்றுவிட்டார். சில தினங்களுக்கு முன்னர், திமுக எம்.பி ஆ.ராசா இந்துக்கள் பற்றியும், மனு ஸ்மிருதி மற்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சில கருத்துக்களை கூறினார். ஆ.ராசா கூறிய கருத்துக்களுக்கு, இந்து அமைப்பினர் மற்றும் பாஜகவினர் மத்தியில் கடும் அதிர்வலையினை ஏற்படுத்தியது. கோவையில் இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்திற்கு எல்லாம் […]
ப்ளூ காய்ச்சலுக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதால், பள்ளி குழந்தைகளுக்கு விடுமுறை தேவையில்லை என சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். ஃப்ளூ காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தற்போது தமிழகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்த காய்ச்சல் அதிகரித்து வருவதால், பள்ளிக்குழந்தைகளுக்கு புதுசேரி அரசு போல, தமிழக அரசும் விடுமுறை அளிக்குமா என்ற கேள்வி எழுந்தது. இது குறித்து பேட்டியளித்த பள்ளிக்கல்வித்துறை […]
ஷட்டர் பழுதடைந்த பாலக்காடு, பரம்பிக்குளம் அணையை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், ‘ அணையில் இருந்து நீர் வெளியேறுவதை பார்க்கையில் மனம் வேதனைப்படுகிறது.’ என குறிப்பிட்டார். கேரளா மாநிலம் பாலக்காட்டில் அமைந்திருக்கும், பரம்பிக்குளம் அணை தான் கேரள மாநிலம் பாலகாடு, திருசூர் உட்பட தமிழகத்தில் கோவை சுற்றுவட்டார பகுதிக்கும் நீர் ஆதாரமாக திகழ்கிறது. அந்த பரம்பிக்குளம் அணையில் நேற்று அதிகாலை 1 மணி அளவில் தண்ணீர் திறக்கும் மதகு (ஷட்டர் செயின்) பழுதடைந்த காரணத்தால், […]
இந்தியா முழுவதும் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் வேளையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, முக்கிய பாதுகாப்பு அதிகாரிகளுடன் உள்துறை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகம், கேரளா உட்பட இந்தியா முழுவதும் 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ சோதனை நடத்தி வருகின்றனர். நாடு முழுவதும் எஸ்.டி.பி.ஐ கட்சி அலுவலகங்கள், பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகங்கள் இந்த சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. தமிழத்தில், கோவை, தேனி, ராமநாதபுரம், தென்காசி என […]
திமுக எம்.பி ஆ.ராசா இந்துக்கள் குறித்து பேசியதற்கும், கோவையில், போராடிய பாஜகவினர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வரும் 26ஆம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திமுக எம்பி ஆ.ராசா, சில தினங்களுக்கு முன்னர் ஓர் அரசியல் கூட்டத்தில் பேசுகையில், மனு ஸ்மிருதி பற்றி பேசியிருந்தார். அப்போது, நீ கிறிஸ்தவனாக இல்லாமல் இருந்தால், இஸ்லாமியராக இல்லாது இருந்தால் கண்டிப்பாக இந்துவாக தான் இருக்க வேண்டும். இந்துவாக நீ […]
அதிமுக கலவர வழக்கு தொடர்பாக, ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பினர் இன்று நேரில் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட குறிப்பிட்ட நேரத்தில் சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராக உள்ளனர். கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி, சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலக வளாகத்தில் இரு தரப்பினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில், அதிமுக அலுவலகம் மற்றும் வளாகத்தில் இருந்த பொது சொத்துக்கள் சேதமடைந்தன. இது தொடர்பாக, முன்னாள் அமைச்சரும் இபிஎஸ் ஆதரவாளருமான சி.வி.சண்முகம் கொடுத்த புகார், ஓபிஎஸ் […]
அதிமுக அரசியல் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தன், ஓர் பெண் காவலரை ஒருமையையில் பேசி திட்டியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. தருமபுரி மாவட்டம், அரூர் பகுதியில், அதிமுக சார்பில் அரசியல் கூட்டம் நடைபெற்றது. அண்ணா நூற்றாண்டு விழா எனும் பெயரில் இந்த அரசியல் கூட்டம் நடைபெற்றது. அதில் பல்வேறு அதிமுக பிரமுகர்கள் கலந்துகொண்டனர். அதில், முன்னாள் அதிமுக அமைச்சர் முல்லை வேந்தனும் கலந்து கொண்டார். அந்த விழாவில் முல்லை வேந்தன் பேசியது சர்ச்சையை கிளப்பியது. அவர் […]
முதல்வர் ஸ்டாலின் குறித்த சர்ச்சையான போஸ்டர் ஒட்ட காரணமாக இருந்த கிருஷ்ணகுமார் முருகன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் உதவியாளர் என தகவல் வெளியாகியுள்ளது. இம்மாதம் கடந்த 11ஆம் தேதி முதல்வர் மு.க,ஸ்டாலினை குறிக்கும் வகையில் சென்னையில் முக்க்கிய பகுதிகளில் தவறான போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது. இதுகுறித்து, அந்த மாதிரியான போஸ்டர்களை ஒட்டியது யார்? யாருடைய தூண்டுதலின் பெயரில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டது? என போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், […]