காசா : 2023 அக்டோபரில் தொடங்கிய இஸ்ரேல் – ஹமாஸ் போரால் பெரும் பாதிப்புக்கு உள்ளான காசா நகரில் உள்ள பாலஸ்தீன நாட்டு மக்களுக்கு தற்போது இடைக்கால நிவாரணமாக 6 வார கால போர் நிறுத்தம் சற்று ஆறுதலை தந்துள்ளது. இந்த இடைக்கால நிவாரணம் நிரந்தர தீர்வாக இருக்க வேண்டும் என பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த 6 வார கால போர் நிறுத்தத்தை அடுத்து காசா நகரத்து மக்கள் நீண்ட மாதங்களுக்கு பிறகு தாங்கள் வசித்த […]
சியாட் : அமெரிக்காவின் அதிபராக 2வது முறையாக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் பல்வேறு அதிரடி முடிவுகளை தினமும் வெளியிட்டு வருகிறார். அதில் பிரதானமானது சட்டவிரோதமாக குடியுரிமை பெறுவதை தடுப்பது மற்றும் ஏற்கனவே சட்ட விரோதமாக குடியேறியவர்களை அமெரிக்காவில் இருந்து வெளியேற்றுவதாகும். அதில் முக்கிய நகர்வாக, அமெரிக்காவில் பிறப்பால் ஒரு குழந்தை அமெரிக்vvக குடிமகனாக மாறும் நடைமுறையை டிரம்ப் மாற்ற கையெழுத்திட்டுளளார். அதாவது, அமெரிக்காவில் பிறக்கும் குழந்தையின் தாய் அல்லது தந்தை இருவரும் அமெரிக்க குடிமகன்களாகவோ அல்லது அமெரிக்காவில் […]
நைபியிடவ் : இன்று (ஜனவரி 24) அதிகாலை 12.53 மணியளவில் மியான்மர் (பர்மா) நாட்டின் ஒரு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய அரசின் தேசிய நில அதிர்வு மையமான NCS தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது. NCS வெளியிட்டுள்ள தகவலின்படி, மியான்மர் நாட்டில் 24 ஜனவரி (இன்று) அதிகாலை 12.53 மணியளவில் 4.8 ரிக்டர் எனும் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்றும், இந்த நில அதிர்வு கடல் மட்டத்தில் இருந்து 106 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது […]
ஜாவா : இந்தோனேஷியா 17,000 தீவுகளைக் கொண்ட ஒரு தீவுக்கூட்டமாகும். அதில், மத்திய ஜாவா மாகாணத்தில் பெக்கலோங்கன் நகருக்கு அருகில் உள்ள மலைப் பகுதியில் கடந்த ஜனவரி 20 அன்று பெய்த கனமழையால் நிலச்சரிவு, பாலங்கள் இடிந்து, கார்கள் மற்றும் வீடுகள் புதைந்தன. இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது, 8 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்களை தேடல் மற்றும் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மோசமான வானிலை மாற்றத்தால் கனமழை, […]
அமெரிக்கா : மாநிலத்திற்கு என்ன தான் ஆச்சு என்கிற வகையில், இந்த ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொழுந்துவிட்டு தீ ஒரு பக்கம் பரவி வருகிறது. இதுவரை 40,000க்கும் அதிகமான ஏக்கர் நிலம், 12,000க்கும் அதிகமான கட்டடங்கள் தீக்கிரையான நிலையில், 25 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு பக்கம் தீ பரவி வரும் சூழலில் தீயணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். மற்றொரு பக்கம் மிசிகன், நியூயார்க், பின்சில்வேனியா, மற்றும் மற்ற சில மாநிலங்களில் பனிப்புயல் ஏற்பட்டு இருக்கிறது. இந்த […]
போலு : துருக்கி ஹோட்டலில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 76ஆக அதிகரித்துள்ளது. இஸ்தான்புல்லுக்கு கிழக்கே சுமார் 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள போலு மாகாணத்தின் கொரோக்லு மலைப்பகுதியில் உள்ள கர்தல்காயாவில் உள்ள ஸ்கை ஹோட்டலில் இந்த தீ விபத்து நடந்துள்ளது. நேற்று அதிகாலை 3:27 மணிக்கு திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் அங்கு தங்கியிருந்தோர் பலர் உடல் கருகி உயிரிழந்தனர். தீ விபத்து ஏற்பட்டதும் அதிகாலை 4:15 மணிக்கு […]
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக நேற்று முன்தினம் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் பதவி ஏற்றார். 2வது முறையாக அமெரிக்க அதிபரான டிரம்ப் ஆரம்பம் முதலே பல்வேறு அதிரடி மாற்றங்களுக்கு கையெழுத்திட்டு வருகிறார். எந்த நாட்டு தலைவர்கள் என்ன நடவடிக்கை எடுத்தால் என்ன, அமெரிக்காவுக்கு மட்டுமே முன்னுரிமை என்ற நோக்கத்தில் அவரது அதிரடி முடிவுகள் அமைaaந்து வருகின்றன. ஏற்கனவே, கொரோனாவில் சரிவர முன்னெச்சரிக்கை நடவடிக்கை அளிக்கவில்லை எனக் கூறி உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக […]
துருக்கி: கடந்த ஜனவரி 13 ஆம் தேதி, தாய் நாய் ஒன்று சுயநினைவு இழந்த தனது குட்டியை வாயில் கவ்விக்கொண்டு அவசரமாக கால்நடை மருத்துவ மனைக்கு எடுத்துச் சென்ற நெஞ்சை நெகிழ வைத்த சம்பவம் துருக்கியில் நடந்துள்ளது. இது தொடர்பான காணொளி காட்சி இணயத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த உருக வைக்கும் காட்சியானது தாய்க்கும் குழந்தைக்கும் இடையேயான பாசப்பிணைப்பை உணர்த்துகிறது. துருக்கியின் இஸ்தான்புல்லில் மழை பெய்து கொண்டிருக்கும் பொழுது, மழையில் நனைந்த சுயநினைவு இழந்த தனது […]
வாஷிங்டன் : நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்ற நிலையில், வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் அமெரிக்காவின் 47-வது அதிபராக பதவியேற்றுக்கொண்டார். இவருடைய பதவியேற்பு விழாவானது இன்று வாஷிங்டன் டிசி-யில் உள்ள அரங்கிற்குள் நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் அதிபர்கள் ஜோ பைடன், பாரக் ஒபாமா என எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் , பன்னாட்டு தொழிலதிபர்களான எலான் மஸ்க், சுந்தர்பிச்சை என பலர் கலந்து கொண்டனர். இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் ஷங்கர் […]
வாஷிங்டன் : அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் நேற்று வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் பதவி ஏற்றுக்கொண்டார். பதவி ஏற்று கொண்டது முதல் பல்வேறு அதிரடியான முடிவுகளில் கையெழுத்திட்டு வருகிறார். தேர்தல் பிரச்சாரத்தின் போதே கூறியது போல ‘அமெரிக்கா இனி அமெரிக்கர்களுக்கே’ எனும் கொள்கையை முன்னிறுத்தி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதில் மிக முக்கியமாக குடியேற்ற கொள்கையில் திருத்தம், சட்டவிரோத குடியேற்றம் தடுத்தல், இருபாலின கொள்கை போன்றவை மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதில் சிலவற்றை கிழே […]
வாஷிங்டன் : கடந்த ஆண்டு நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் 47வது அதிபராக நேற்று (ஜனவரி 20) தனது ஆதரவாளர்களுக்கு முன்னிலையில் பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் பதவியேற்கும் விழாவானது வாஷிங்டன் டிசி-யில் அரங்கிற்குள் நடைபெற்றது. கோலாகலகமாக நடைபெற்ற இந்த விழாவில் முன்னாள் அதிபர்கள் ஜோ பைடன், பாரக் ஒபாமா என எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் , பன்னாட்டு தொழிலதிபர்களான எலான் மஸ்க், சுந்தர்பிச்சை என பலர் கலந்து கொண்டனர். அதிபராக டொனால்ட் […]
வாஷிங்டன் : அமெரிக்காவின் 47வது அதிபராக நேற்று (ஜனவரி 20) டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்றுக்கொண்டார். வழக்கமாக வாஷிங்டன் டிசி-யில் திறந்தவெளி பகுதியில் நடைபெறும் இந்த பதவியேற்பு விழா இந்த முறை அரங்கிற்குள் நடைபெற்றது. கோலாகலகமாக நடைபெற்ற இந்த விழாவில் முன்னாள் அதிபர்கள் ஜோ பைடன், பாரக் ஒபாமா என எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் , பன்னாட்டு தொழிலதிபர்களான எலான் மஸ்க், சுந்தர்பிச்சை என பலர் கலந்து கொண்டனர். இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் ஷங்கர் […]
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை 2022-ல் கத்தார் நாடு நடத்தியது. அதில் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி கோப்பையை வென்றது. இதனை அடுத்து 2026ஆம் ஆண்டு ஃபிபா உலக கோப்பையை அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்த உள்ளன. அதனை தொடர்ந்து 2030-ல் நடைபெறும் ஃபிபா உலககோப்பை கால்பந்து போட்டியை ஸ்பெயின், போர்ச்சுகல், மொராக்கோ ஆகிய நாடுகள் […]
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது. காசா நகரில் இன்று (ஜனவரி 19) முதல் 6 வார காலத்திற்கு போர் நிறுத்தம் அமலில் இருக்கும் எனவும், இந்த போர் நிறுத்த காலத்தில் இரு தரப்பும் தங்கள் வசம் உள்ள பணய கைதிகளை விடுவிப்பார்கள் என கூறப்பட்டுள்ளது. முதலில் இன்று ஹமாஸ் தரப்பில் உள்ள 33 பணய கைதிகளில் 3 பேரை காசா நகரில் […]
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் – ஹமாஸ் போரானது இன்று முதல் 6 வார காலத்திற்கு இடைக்கால போர் நிறுத்தம் என அறிவிக்கப்பட்டது. இந்த 6 வார காலத்தில் இரு தரப்பும் தங்கள் வசம் உள்ள பணய கைதிகளை விடுவிப்பார்கள் என கூறப்பட்டது. இன்று மாலை இந்த பரிமாற்றம் இருக்கும் என கூறப்பட்டது. ஆனால், நேற்று இரவு பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸ் தரப்பு 33 பணய […]
டெல் அவில் : இஸ்ரேல் ஹமாஸ் போரானது கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் தொடங்கி 15 மாதங்களை கடந்து இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த போரை நிறுத்த கோரி பல்வேறு நாட்டு தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். அமெரிக்கா, கத்தார், எகிப்து உள்ளிட்ட நாடுகள் இரு தரப்புக்கும் இடையே மத்தியஸ்தலத்திலும் ஈடுபட்டன. இதனை அடுத்து கடந்த புதன்கிழமை இரு அமைப்புகளும் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன என கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் […]
நியூ யார்க் : அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கும் நாள் நெருங்கிவிட்டது என்றே கூறவேண்டும். அதற்கான உறுதி தீர்பபை அண்மையில் அந்நாட்டு உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அமெரிக்காவில் செயல்பாட்டில் இருக்கும் டிக் டாக் செயலி மூலம் அந்நாட்டு பயனர்களின் தரவு பாதுகாப்பு பாதிக்கப்படுவதாக தொடர் குற்றசாட்டுகள் எழுந்து வருகின்றன. டிக் டாக் செயலியின் தரவு மேலாண்மையானது அதன் தலைமை இடமான சீனாவில் தான் உள்ளது. இதனால் அமெரிக்கர்களின் தரவுகள் பாதிக்கப்படுவதாக கூறி டிக் டாக் செயலியை […]
இஸ்ரேல்: ஹமாஸ் உடன் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது. காசாவில் ஹமாஸ் உடனான இஸ்ரேல் போர் நிறுத்தம் நாளை முதல் நடைமுறைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது. காசாவில் கடந்த 2023-ல் தொடங்கிய இஸ்ரேலியப் படைகளுக்கும் ஹமாஸுக்கும் இடையேயான போர், கிட்டத்தட்ட 15 மாதத்துக்கு பின் முடிவுக்கு வருகிறது. இந்நிலையில், இந்த போர்நிறுத்த ஒப்பந்தத்தை பாலஸ்தீனியர்கள் கொண்டாடினர். காசா பகுதியில் 15 மாதங்களுக்கும் மேலாக பாலஸ்தீனியர்கள் […]
சென்னை: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் இரவு முழுவதும் போராடியும் இன்னும் கட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை. அதற்கு காரணம் காற்று தான், பலத்த காற்று காரணமாக தீ பயங்கரமாக பரவி வருகிறது. இதனால், தீயை அணைக்கும் பணியில் தொய்வு விழுந்துள்ளது. அங்கு கடந்த சில நாட்களாக பலத்த காற்று வீசுவதால் வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது. லாஸ் ஏஞ்சல்ஸ் எரிந்து வரும் காட்டுத்தீ பகுதிகள் உட்பட […]