உத்தரபிரதேசம் : எதிர்பாராமல் நடக்கும் விபத்து சம்பவங்களில் சிலர் பலியாகும் செய்திகளை பார்த்தோம் என்றாலே நமக்கு வேதனையாகிவிடும். அப்படி தான் உத்தரபிரதேசம்ஹர்தோய் மாவட்டத்தில், பெட்ரோல் பங்கில் நின்று கொண்டிருந்த பேருந்து ஓட்டுநர் இல்லாமல் நகர்ந்து மோதி பெட்ரோல் நிலைய ஊழியர் தேஜ்பால் என்பவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று காலை பஸ் ஒன்று பெட்ரோல் பங்கிற்கு வந்து இருந்தது. அப்போது அருகில் பெட்ரோல் நிலைய ஊழியர் பைக் ஒன்றுக்கு காற்று அடித்து கொண்டு இருந்தார். பின், நின்று […]
தமிழ்நாடு : நாமக்கல் மாவட்டத்தில் கடந்த செவ்வாய்கிழமையன்று தனியார் பேருந்து ஒன்று வேகமாகவும் சீராகவும் சென்று கொண்டிருக்கையில், கூட்ட நெரிசல் மிகுந்த பேருந்து ஒரு வளைவு ஒன்றில் திரும்புகையில், கதவு அருகே நின்றிருந்த பெண் தூக்கி வீசப்பட்டார். பலத்த காயமடைந்த சாரதா, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி எக்ஸ் வலைதளத்தில் வெளிவந்துள்ளது, இந்த சம்பவத்தின் தொடர்பான ஒரு வீடியோ, சாரதா என அடையாளம் காணப்பட்ட பெண், பேருந்தில் […]
மத்திய பிரதேசம் : சாகரில், நள்ளிரவில், அதிவேகமாக வந்த பைக், நடுரோட்டில் அமர்ந்திருந்த மாடுகள் மீது மோதியதில், பைக் ஓட்டியவரும், கன்றும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும், ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வெளிவந்த தகவலின்படி, இந்த விபத்தில் இறந்தவர் சாகர் பகுதியைச் சேர்ந்த ஹிமான்ஷு மிஸ்ரா (24) என அடையாளம் காணப்பட்டுள்ளார். மாவட்டத்தில் உள்ள பிரதான் சௌரா குழுமத்தின் அலுவலகம் முன்பாக இந்த […]
TNSchools: தனியார் பள்ளி வாகனங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அனைத்து பள்ளி வாகனங்களிலும் ஜிபிஎஸ் மற்றும் சிசிடிவி கேமரா கட்டாயம் பொருத்தவேண்டும் என்றும் என்று தமிழக அரசு உத்தரவிட்டு தனியார் பள்ளி வாகனங்களுக்கான வழிகாட்டுதல் நெறிமுறை வெளியிடப்பட்டுள்ளது. அதில், அனைத்து வாகனங்களிலும் ஒரு பெண் உதவியாளர் நியமிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு பள்ளி வாகனத்திலும் வேக கட்டுப்பாட்டு கருவி பொறுத்தப்பட்டிருக்க வேண்டும். சிசிடிவி கேமரா பொருத்தி, காட்சிகளை சேகரித்து காவல்துறையிடம் வழங்க வேண்டும். பள்ளி வாகன […]
சிசிடிவி-யில் உள்ள முகத்தை கண்டுபிடிப்போருக்கு 1 லட்சம் பரிசு வழங்கப்படும் என சென்னை காவல்துறை அறிவிப்பு. குற்றத் தடுப்பு நடவடிக்கையில் பயன்படும் சிசிடிவி காட்சிகளில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய, ஒரு பரிசு போட்டியை சென்னை காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி, சிசிடிவி காட்சிகளில் பதிவாகும் விவரங்கள், முகங்களை புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கண்டுபிடித்தால் ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும். சிசிடிவி காட்சிகளில் பதிவாகும் முகங்களை கண்டுபிடிப்பதில் சிக்கல்கள் இருப்பதால் காவல்துறை இதுபோன்ற அறிவிப்பை அறிவித்துள்ளது. இரு கட்டங்களாக […]
நிர்பயா பாதுகாப்பு நகர திட்டத்தின் கீழ் மாநகர போக்குக்குவரது கழகங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக 2,500 பேருந்துகளில் சிசிடிவி கேமரா,அவசர அழைப்பு பொத்தான்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக அதில் 500 பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி காணொளி வாயிலாக நேற்று தொடங்கி வைத்தார். பேருந்தில் பயணிக்கும் போது ஏதாவது பிரச்சனை என்றால்,அவசர அழைப்பு பொத்தானை அழுத்தினால்,நேரடியாக கட்டுப்பாடு அறையில் ஒலி எழுப்பும்,இதன் மூலம் பெண்களுக்கோ அல்லது குழந்தைகளுக்கோ பிரச்சனை என்றால்,அருகில் […]
பெங்களூரு பைப்பனஹள்ளியைச் சேர்ந்த 35 வயது பெண் ஒருவர் சனிக்கிழமை காலை 8 மணியளவில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது மாரடைப்பால் இறந்தார். அந்த பெண் ஜிஎம் பால்யாவில் வசிக்கும் வினயா விட்டல் என அடையாளம் காணப்பட்டுள்ளார், அவர் மல்லேஸ்பிளையாவில் உள்ள சேலஞ்ச் ஹெல்த் கிளப்பில் பணிபுரிந்து வந்தார்.வழக்கமான தனது உடற்பயிற்சியினை செய்யும் பொழுது மாரடைப்பால் பெண் சரிந்து விழும் காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பப்ளிக் ஸ்பாட் என்ற யூடியூப் சேனலால் பகிரப்பட்ட […]
சிசிடிவி, ஜிபிஆர்எஸ் இருந்தால் தான் பள்ளி வாகனங்களுக்கு தகுதிச் சான்று கொடுக்கப்படும் என ஈரோடு கோபி செட்டிபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலர் முனுசாமி தெரிவித்துள்ளார். பள்ளி வாகனங்களில் செல்லக் கூடிய மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சிசிடிவி கேமராக்கள், ஜிபிஆர்எஸ் கருவிகள் பொருத்தப்பட்ட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இது குறித்து கூறியுள்ள ஈரோடு கோபி செட்டிபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலர் முனுசாமி அவர்கள் சிசிடிவி, ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தால் தான் பள்ளி […]
அதிகமான கண்காணிப்பு கேமரா கொண்ட நகரங்களின் பட்டியலில் டெல்லி முதலிடம். சமூகத்தில் நடக்க கூடிய கொலை, கொள்ளை போன்ற குற்ற சம்பவங்களை தவிர்க்க காவல் அதிகாரிகள் பணியில் இருந்தாலும், அவர்களது கண்களுக்கு மறைவாக நடக்கும் சம்பவங்களை வெளிக்கொண்டு வருவதில் கண்காணிப்பு கேமராக்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில், போர்ப்ஸ் இந்தியா என்ற ஊடகம் அதிகமான கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பொது இடங்களில் கண்காணிப்பதில் அதிகமாக கவனம் செலுத்தும் நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலானது ஒரு சதுர […]
தமிழகம் முழுவதும் உள்ள கிராம பஞ்சாயத்துகளில் பட்டியலினத்தவர் தலைவராக உள்ள அலுவலக வளாகங்களில் சாதிய ரீதியிலான குற்றங்களை கட்டுப்படுத்த, சிசிடிவி கேமரா பொருத்த உத்தரவிட கோரிய மனுவிற்கு தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் பட்டியலினத்தவர் தலைவராக உள்ள கிராம பஞ்சாயத்து அலுவலகங்களில்,சிசிடிவி பொருத்தக்கோரி வழக்கறிஞர் ராஜகுரு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதாவது,தமிழ்நாட்டில் உள்ள பஞ்சாயத்துகளில் 1997 ஆம் ஆண்டு முதல் 6 பட்டியலின தலைவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.மேலும், […]
இறந்தவர்கள் கடைசியாக விடைபெறுவதை குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பார்ப்பதற்காக சி.சி.டி.வி கருவிகளை பொறுத்தியுள்ள மயானம். கொரோனா பரவலின் காரணமாக இறப்பவர்களின் இறுதி சடங்கில் யாரும் பங்கு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேடில் ஒரு மயானத்தில் எட்டு சி.சி.டி.வி கேமராக்களுடன் இணைய வசதிகளோடு, இறந்தவர்கள் கடைசியாக விடைபெறுவதை குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்கள் பார்க்கக்கூடிய விதத்தில் இந்த வசதியை ஏற்படுத்தியுள்ளனர். இதனை ஏற்பாடு செய்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் தலைவர் ஹர்ஷத் ஷா கூறுகையில் […]
கர்நாடக மாநிலம் பெல்லாரியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 65 வயது முதியவர் உயிரிழந்த நிலையில் அவரது மகன் அந்த மருத்துவமனையில் உள்ள பெண் மருத்துவரை கன்னத்தில் அறைந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில் கொரோனா நெருக்கடி கால கட்டத்தில் முன்கள பணியாளர்களாக பணியாற்றக்கூடிய மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறையினர் அனைவருமே மிகுந்த மன உளைச்சலில் தான் காணப்படுகின்றனர். இருப்பினும் தங்களால் முடிந்த […]
தலைநகர் டெல்லியின் மிகவும் பாதுகாப்பான லுடீயன்ஸ் மண்டல பகுதியில் அமைந்துள்ள டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் சாலையில் உள்ள இஸ்ரேலிய தூதரகம் அருகே நேற்று மாலை குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. இதைத்தொடர்ந்து, டெல்லி பொலிஸ் சிறப்புப் பிரிவின் குழு இன்று காலை இஸ்ரேலிய தூதரகத்திற்கு வெளியே உள்ளது. இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை, ஆனால் தூதரகத்தின் முன் நிறுத்தப்பட்டிருந்த ஐந்து வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்தன. இந்த சம்பவம் இந்தோ-இஸ்ரேலிய தூதரக உறவுகளின் 29 வது ஆண்டு நினைவு […]
ஒரு சதுர கி.மீக்கு எத்தனை கேமராக்கள் என்பது குறித்து 130 நகரங்களில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே சிசிடிவி அதிகமுள்ள பெருநகரங்களின் பட்டியலில் சென்னைக்கு முதலிடம் கிடைத்துள்ளது. கேமரா அடர்த்தி விகிதத்தில் லண்டன், பெய்ஜிங் நகரங்களை பின்னுக்குத்தள்ளியதாக விபின் என்ற நிறுவனம் நடத்திய சர்வதேச அளவிலான ஆய்வில் தகவல் கூறப்பட்டுள்ளது. ஒரு சதுர கி.மீக்கு எத்தனை கேமராக்கள் என்பது குறித்து 130 நகரங்களில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு சதுர கிலோ மீட்டரில் 657 சிசிடிவி […]
நாடு முழுவதும் உள்ள பல காவல் நிலையங்களில் காவல்துறையினர் விசாரணைக்காக கைதிகளை அழைத்துவந்து அடித்துக் கொல்லப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தநிலையில் இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கில், உச்சநீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி அமைக்கும் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும். அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இந்த உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்தது. மேலும், இந்த வழக்கை வருகின்ற ஜனவரி மாதம் 27ஆம் தேதிக்கு […]
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் நடைபெற்ற லாக்கப் இரட்டைப் படுகொலையை மையமாக வைத்து அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டியது அவசியம் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். கடந்த வாரம் இந்தியாவையே உலுக்கும் அளவிற்கு பெரிய போராட்டமாக வெடித்த சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நிகழ்ந்த தந்தை மகன் ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் ஆகியோரின் சித்திரவதை கொலைகள் இந்தியா முழுவதையுமே மிகவும் உலுக்கியது. இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் தூண்டுதல் காரணமாக சமூக வலைதளங்களில் பெரும் புரட்சியாக […]
மாஸ்க் அணியுமாறு சொன்னதற்கு ஆத்திரமடைந்த அரசு அதிகாரி ஒருவர் ஆந்திராவில் ஒரு பெண் அதிகாரியை கொடூரமாக தாக்கிய சி.சி.டி.வி பதிவு வெளியாகியுள்ளது. ஏபி சுற்றுலா ஹோட்டல் அலுவலகத்தில் பெண் ஊழியர் ஒருவர் வேலை செய்து கொண்டிருக்கும்போது தலைமுடியால் ஒரு அதிகாரி வெளியே இருந்து வருகிறார் அப்போது பெண் ஊழியர் மாஸ்க் அணிய சொன்னதால் கோவமடைந்து தலமுடியை பிடித்து தரையில் இழுத்து அடித்து பின்னர் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பெண் ஊழியரை தலைமுடியால் இழுத்துச் சென்ற துணை […]
மறைமுக தேர்தல் முழுவதுமாக வீடியோ பதிவு செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவுக்கு தடை விதித்தது உச்சநீதிமன்றம். ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற நிலையில் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டது .அதில் அதிமுக கூட்டணியை விட திமுக கூட்டணியே அதிக இடங்களில் கைப்பற்றியது. இதனையடுத்து நாளை மாவட்ட ஊராட்சி தலைவர் ,ஒன்றிய தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மறைமுக தேர்தலில் வீடியோ பதிவை செய்யவேண்டும் […]
டெல்லி பெகும்பூர் பகுதியில் உள்ள ஒரு நகைக்கடையில் கடந்த சனிக்கிழமை திருட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுகுறித்து கடை உரிமையாளர் டெல்லி காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் விசாரணையை தொடங்கி உள்ள காவல் துறையினர், கடையில் உள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் ஆய்வு செய்தனர். சிசிடிவி காட்சிகளை வைத்து பார்க்கையில், திருடரின் முகம் மிகத் தெளிவாக பதிவாகியது. இதில், முதலாவதாக வாடிக்கையாளரை போல இரண்டு நபர்கள் வந்தனர். இவர்களை தொடர்ந்து, மேலும் இருவர் கடைக்குள் நுழைந்தனர். உடனே […]
வேலூரில் நாளை மக்களவை தேர்த நடைபெற உள்ளது. இதில் அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகம், திமுக சார்பில் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி என மொத்தம் 28 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். டிடிவி தினகரனின் அமமுக, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிகள் சார்பில் யாரும் போட்டியிடவில்லை. தேர்தல் நடைபெறுவதால் வேலூர் முழுவதும் போலீஸ் பறக்கும் படையினர் தீவீர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த நேரத்தில் தான் குடியாத்தம் அரசு தொடக்க பள்ளியில் உள்ள வாக்கு […]