வணிகம்

முதல் நாளிலே ஏற்றம்..! சென்செக்ஸ் 62,889 புள்ளிகளாக வர்த்தகம்..!

Published by
செந்தில்குமார்

பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 216.16 புள்ளிகள் உயர்ந்து 62,889 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 18,624 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

கடந்த வாரங்களில் சரிவுடன் வர்த்தகமாகிவந்த இந்தியப் பங்குச்சந்தை, வாரத்தின் முதல் நாளான இன்று ஏற்றத்துடன் தொங்கியுள்ளது. இன்றைய வர்த்தக நாளில் 62,759 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 341.95 புள்ளிகள் அல்லது 0.55% என உயர்ந்து 62,889 புள்ளிகளாக வர்த்தகம் ஆகிறது.

மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 90.40 புள்ளிகள் அல்லது 0.49% உயர்ந்து 18,624 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்று வருகிறது. முந்தைய வர்த்தக நாள் முடிவில் சென்செக்ஸ் 62,547 புள்ளிகளாகவும், நிஃப்டி 18,534 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது.

இதற்கிடையில், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு சந்தையில் முதலீடு செய்து வரும் வேளையில் உள்நாட்டு முதலீட்டாளர்கள் தங்களது அதிகப்படியான பங்குகளை விற்பனை செய்து வருகின்றனர். கடந்த மாதங்களை விட மே மாதத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் கிட்டத்தட்ட ரூ.30,000 கோடி முதலீடு செய்துள்ளனர்.

மஹிந்திரா & மஹிந்திரா, ஆக்சிஸ் வங்கி, மாருதி சுசுகி இந்தியா, சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ், டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்படுகின்றன. டெக் மஹிந்திரா, ஏசியன் பெயிண்ட்ஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர், டைட்டன் நிறுவனம், நெஸ்லே இந்தியா உள்ளிட்ட நிறுவங்களின் பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன

Published by
செந்தில்குமார்

Recent Posts

“ரொம்ப கவனமா விளையாடுங்க”..இந்தியாவுக்கு எச்சரிக்கை கொடுத்த கங்குலி!

லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…

14 minutes ago

ஆய்வில் அதிர்ச்சி : “குழந்தைகளுக்கு செல்போன் கொடுக்காதீங்க” எய்ம்ஸ் மருத்துவமனை எச்சரிக்கை!

டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…

59 minutes ago

பி.எட். மாணவர் சேர்க்கை: விண்ணப்ப அவகாசம் ஜூலை 21 வரை நீட்டிப்பு!

சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…

3 hours ago

INDvsENG : இனிமே தான் போட்டி செமயா இருக்கும்… 4 ஆண்டுகளுக்கு பிறகு களமிறங்கும் ஜோப்ரா ஆர்ச்சர்!

லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…

4 hours ago

தூத்துக்குடி வின்ஃபாஸ்ட் தொழிற்சாலை: ‘நான் முதல்வன்’ திட்டத்தில் 200 மாணவர்கள் தேர்வு!

சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…

5 hours ago

புடின் மக்களை கொல்கிறார்…கடுமையாக சாடிய டொனால்ட் டிரம்ப்!

வாஷிங்டன் :  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…

5 hours ago