தங்கத்தின் தேவையானது இந்த காலாண்டான ஜனவரி முதல் மார்ச் வரையில் 36 சதவீதம் வரையில் குறைந்து 101.9 டன்னாக உள்ளது
கொரோனா வைரஸால் பல்வேறு நாடுகளில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக பல தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பாதிப்பு தங்கத்தையும் விட்டுவைக்கவில்லை. கடந்தாண்டை ஒப்பிடுகையில் தங்கத்தின் தேவை வெகு அளவு குறைந்துள்ளது.
கடந்த காலாண்டுடன் ஒப்பிடுகையில், தங்கத்தின் தேவையானது இந்த காலாண்டான ஜனவரி முதல் மார்ச் வரையில் 36 சதவீதம் வரையில் குறைந்து 101.9 டன்னாக உள்ளது. கொரோனாவினால் ஊரடங்கு, பொருளாதார வீழ்ச்சி போன்றவற்றால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஆபரண தங்கம், ஏனைய தங்க முதலீடு ஆகியவை வீழ்ச்சி கண்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த மீண்டும் தங்க வியாபார சங்கிலியை மறுசீரமைப்பு செய்யவேண்டும். இல்லையென்றால் இந்தாண்டு மிகவும் சவாலான ஆண்டாக மாறிவிடும் சூழல் உருவாகும்.
உலக தங்க கவுன்சில் (WGC) இந்திய நிர்வாக தலைவர் சோமசுந்தரம் கூறுகையில், ஆபரண தங்கத்தின் தேவையானது இந்த காலாண்டில் 20 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த காலாண்டில் 47 ஆயிரம் கோடியாக இருந்த நிலை, இந்த காலாண்டில் 37,580 கோடியாக குறைந்துள்ளது. இதற்கு காரணம், பொருளாதாரத்தின் நிலையற்ற நிலை, பொருளாதார வீழ்ச்சி, ஊரடங்கு ஆகியவை ஆகும். ‘ என WGC இந்திய நிர்வாக தலைவர் சோமசுந்தரம் குறிப்பிட்டார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…