பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

பாகிஸ்தான் ராணுவம் நடத்திய ஏவுகணை சோதனை வெற்றி பெற்றது என அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

Pakistan army missle

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றமானது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

இரு நாட்டு ராணுவ வீரர்களும்தங்கள் படைகளை தயார் படுத்தும் முனைப்பில் இருந்து வருகின்றனர். ஏற்கனவே பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் முப்படைகளுக்கும் முழு சுதந்திரம் அளித்து பாதுகாப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேபோல பாகிஸ்தான் அரசும் அந்நாட்டு ராணுவத்தை பலப்படுத்தி வருகிறது. பாகிஸ்தான் INDUS பகுதியில் அந்நாட்டு ராணுவம் ஏவுகணை சோதனையை செய்துள்ளது. அப்தாலி என அழைக்கப்படும் அந்த ஏவுகணைகள் 450 கி.மீ தொலைவு வரையில் தரையில் இருந்து இலக்கை குறிவைத்து தாக்கும் திறன் கொண்டது. இந்த ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக அந்நாட்டு ராணுவம் வீடியோ மூலம் தெரிவித்து உள்ளது.

பாகிஸ்தான் ராணுவ செயல்பாடுகள் மற்றும் அதன் தயார்நிலையை உறுதி செய்யவும், ஏவுகணை சோதனையை மேம்படுத்தவும், அதன் முக்கிய தொழில்நுட்ப அளவுருக்களை சரிபார்க்கவும் பாகிஸ்தான் அரசாங்கம் அந்நாட்டு ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்