அதிகரித்த பங்குச்சந்தை முதலீடு..! சென்செக்ஸ் 62,345 புள்ளிகளாக நிறைவு..!

Published by
செந்தில்குமார்

பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 317.81 புள்ளிகள் உயர்ந்து 62,345 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 18,398 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

இந்தியப் பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளான இன்று ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியது. இன்றைய வர்த்தக நாளில் 62,157 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் வர்த்தக நாளின் முடிவில் 317.81 புள்ளிகள் அல்லது 0.51% என உயர்ந்து 62,345 புள்ளிகளாக வர்த்தகம் ஆகிறது.

மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 84.05 புள்ளிகள் அல்லது 0.46% உயர்ந்து 18,398 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்று வருகிறது. முந்தைய வர்த்தக நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 62,027 புள்ளிகளாகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 18,314 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது.

டாடா மோட்டார்ஸ், டெக் மஹிந்திரா, ஐடிசி லிமிடெட், ஹிந்துஸ்தான் யூனிலீவர், லார்சன் & டூப்ரோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்படுகின்றன. மாருதி சுசுகி இந்தியா, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ், பஜாஜ் ஃபின்சர்வ் ஆகிய நிறுவங்களின் பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன

மேலும், அந்நிய முதலீட்டாளர்கள் செய்த முதலீடு கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. கடந்த மாதங்களை விட மே மாதத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் ரூ.18,617 கோடி முதலீடு செய்துள்ளனர். இதுவே பங்குச்சந்தையில் ஏற்பட்ட மாற்றத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

பாகிஸ்தானின் 4 விமான தளங்கள் மீது இந்தியா தாக்குதல்! போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…

5 minutes ago

அதிகரிக்கும் போர் பதற்றம்., 32 விமான நிலையங்கள் மூடல்! மொத்த லிஸ்ட் இதோ…

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…

1 hour ago

டார்கெட் வைத்த 26 பாகிஸ்தான் ட்ரோன்கள்! சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…

2 hours ago

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

12 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

12 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

12 hours ago