”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

பாகிஸ்தானின் தாக்குதலை வழிமறித்து தடுத்து அழித்தது இந்தியா என்று வியோமிகா சிங், விங் கமாண்டர் பெருமிதம் தெரிவித்தார்.

Vyomika Singh

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல் குறித்து வெளியுறவு அமைச்சக செயலாளர் மற்றும் ராணுவ கர்னல் சோபியா குரேஷி, விமானப்படை விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.

அப்போது விங் கமாண்டர் வியோமிகா சிங் பேசுகையில், ”வான் எல்லையை மூடாமல் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது, பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தியா மீது தாக்குதல் நடத்திய போது பாகிஸ்தானின் எல்லைப் பகுதிகளில் பன்னாட்டு பயணிகள் விமானங்கள் வான் பரப்பில் பறந்தது.

காஷ்மீர் முதல் குஜராத் வரை எல்லையில் பல்வேறு இடங்களில் பாகிஸ்தான் தாக்க முயன்றது. இந்திய ராணுவ தளங்களையும் குறிவைத்து தாக்குதல் நடத்த நேற்றிரவு பாகிஸ்தான் முற்பட்டது, ஆனால் பாகிஸ்தானுடைய அந்த நடவடிக்கைகளை இந்திய ராணுவம் முறியடித்தது.

சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் ட்ரோன்கள் குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக அவர்கள் துருக்கி நாட்டின் ட்ரோன்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ளது தெரியவந்துள்ளது. மேலும், எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் கனரக பீரங்கிகள், ட்ரோன்களை பயன்படுத்தி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இதில் சில இந்திய ராணுவ வீரர்களை நாம் இழந்தோம் சிலருக்கு காயங்கள் ஏற்பட்டன.

பாகிஸ்தானில் உள்ள 4 வான் பாதுகாப்புத் தளங்கள் மீது இந்தியா ஆயுதமேந்திய ட்ரோன்களை ஏவியது, அவற்றில் ஒன்று பாகிஸ்தானின் ஹனு ரேடாரை அழித்தது. இந்திய பதிலடித் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவம் பெரும் இழப்புகளைச் சந்தித்தது” என்றார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்