மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

ஜம்மு காஷ்மீர் மீது பாகிஸ்தான் மீண்டும் டிரோன் தாக்குதல் நடந்து வரும் நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு சைரன் ஒலி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Drones intercepted in Jammu

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை ஏவிய பாகிஸ்தான் தற்போது ஜம்மு எல்லைக்கு அப்பாலில் இருந்து, டிரோன்களை அனுப்பி ஊடுருவுகிறது.

அதாவது, ஜம்மு-காஷ்மீரின் உரி பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, சைரன் ஒலி மூலம் மக்களுக்கு ராணுவம் எச்சரிக்கை விடுத்து வருகிறது. இதேபோல், அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தான் படையினருக்கு எல்லையில் உள்ள இந்திய ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.

இதை நமது ராணுவத்தினர் நடுவானிலேயே சுட்டு வீழ்த்தி, எதிரியின் முயற்சிகளை முறியடித்து வருகின்றனர். இதனால் நமது வான்பாதுகாப்பு சாதனங்கள் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கின்றன. இந்த ட்ரான் தாக்குதல்களுக்கு மத்தியில், ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தனது இடத்திலிருந்து வெடிச்சத்தங்களைக் கேட்டதாகக் கூறினார்.

ஒமர் அப்துல்லா தனது எக்ஸ் பக்கத்தில்  “நான் இருக்கும் இடத்திலிருந்து இப்போது இடைவிடாத குண்டுவெடிப்பு சத்தங்கள், அநேகமாக கனரக பீரங்கி சத்தங்கள் கேட்கின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்