முஹுரத் வர்த்தகம் 2023: தீபாவளி நாளின் சிறப்பு வர்த்தகம்.! எப்போது தொடக்கம்..முழு விவரம் இதோ.!

MuhuratTrade2023

தீபாவளி என்பது நாடு முழுவதும் கொண்டாடப்படும் ஒரு கோலாகலமான பண்டிகை ஆகும். இந்த தீபாவளி வரும் நவம்பர் 12ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை), தமிழ்மாதத்தின்படி, வரும் ஐப்பசி மாதம் 26ம் நாள் கொண்டாடப்படுகிறது. இந்த அற்புதமான நாளில் நாம் தொடங்கும் ஒவ்வொரு காரியமும் மங்களகரமாகவும், சிறப்பாகவும் அமையும் என்பது பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வரும் ஒரு நம்பிக்கை.

முஹுரத் டிரேடிங்

இது சாதாரண மக்களுக்கு மட்டுமல்லாமல் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கும் பொருந்தும். ஏனென்றால் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை முன்னிட்டு ‘முஹுரத் டிரேடிங்’ எனும் சிறப்பு வர்த்தகம் நடைபெறும். பொதுவாக  இந்த நேரத்தில், வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்குவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

ஏனென்றால், “முஹுரத்” என்ற வார்த்தைக்கு சமஸ்கிருதத்தில் “மங்களகரமான நேரம்” என்று பொருள் இந்த நன்னாளில் பங்குகளை வாங்குவது என்பது வரவிருக்கும் நிதியாண்டில் நல்ல அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் தேடித்தரும். இந்த நல்ல நேரத்தில் வர்த்தகத்தை நடத்துவது செல்வத்தையும் வெற்றியையும் கொண்டு வரும் என்ற நம்பிக்கையும் உள்ளது.

வர்த்தக நேரம்

சாதாரண நாட்களில் இந்தியாவில் காலை 9.15 முதல் மாலை 3.30 வரை வர்த்தகம் நடைபெறும். ஆனால் தீபாவளியன்று வழக்கமான வார நாட்களைப் போலல்லாமல், ஒரு மணிநேரம் மட்டுமே வர்த்தகம் நடைபெறும். ஒரு மணி நேர வர்த்தக அமர்வுக்காக, மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி போன்ற இந்திய பங்குச்சந்தைகள் திறக்கப்படும்.

இந்த அமர்வு மாலை 6.15 மணியில் இருந்து 7.15 வரை நடைபெறும். முஹுரத் வர்த்தகத்தின் நேரம் என்பது ஜோதிடர்களால் தீர்மானிக்கப்படுகிறது. இதன்பிறகு அந்த நேரம் பங்குச் சந்தைகளால் முன்கூட்டியே அறிவிக்கப்படுகிறது. ஆனால் பொதுவாக இந்த சிறப்பு வர்த்தகம் லட்சுமி பூஜைக்குப் பிறகு மாலையில் நடைபெறும்.

முஹுரத் வர்த்தகம் வரலாறு

முஹுரத் வர்த்தகம் என்பது இந்தியாவில் வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்களால் பல நூற்றாண்டுகளாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த முஹுரத் வர்த்தக நடைமுறை ஆனது முதலில் பண்டைய இந்தியாவில் மன்னர் விக்ரமாதித்யாவால் தொடங்கப்பட்டது. தீபாவளி அன்று முஹுரத் வர்த்தகத்தைத் தொடங்குவது தனது ராஜ்ஜியத்திற்கு செழிப்பைக் கொண்டுவரும் என்று அவர் நம்பியதாகக் கூறப்படுகிறது.

காலப்போக்கில், இது வணிகர்களிடையே ஒரு வழக்கமாக உருவானது. இதனை 1957ம் ஆண்டில் பிஎஸ்இ முதன்முதலில் ஏற்றுக்கொண்டதையடுத்து, முஹுரத் வர்த்தகத்திற்கு அதிகாரப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனை என்எஸ்இ ஆனது 1992ம் ஆண்டு ஏற்றுக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 05122024
Maharashtra cm
Somanath
colours (1) (1)
Tughlaq AliKhan
rinku singh kkr Sunil Narine