நடப்பு வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் சற்று ஏற்ற இறக்கத்தில் காணப்படுகின்றன.
இந்திய சந்தைகள் இன்று ப்ரீ ஓபனிங் சந்தை தொடக்கத்தில் பலமான சரிவில் தான் காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 581.19 புள்ளிகள் குறைந்து, 55,048.30 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 174.30 புள்ளிகள் குறைந்து, 16,394.50 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து 2 பங்குகள் ஏற்றத்திலும், 1 பங்குகள் சரிவிலும்,3224 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
நடப்பு வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் சற்று ஏற்ற இறக்கத்தில் காணப்படுகின்றன. இதனால் அதிகளவிலான தடுமாறத்தை மும்பை பங்குசந்தை சந்தித்து வருகிறது. இது வாரத்தின் இறுதி வர்த்தக நாள் என்பதால், சந்தையில் புராபிட் புக்கிங்காக இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில் தற்போதைய நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 211.70 (-0.38%) புள்ளிகள் குறைந்து, 55,417.79 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 102.85 (-0.62%) புள்ளிகள் குறைந்து, 16,466.00 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்படுகிறது.
இதனிடையே, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சற்று குறைந்து, 74.91 ரூபாயாக காணப்படுகிறது. சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகளளும் சிவப்பு நிறத்திலேயே காணப்படுகின்றன. இதில், பிஎஸ்இ மெட்டல்ஸ் 4% சரிவிலும், நிஃப்டி பிஎஸ்இ, பேங்க் நிஃப்டி உள்ளிட்ட குறியீடுகள் 1% மேலாகவும், மற்ற குறியீடுகள் 1% கீழாகவும் சரிவில் உள்ளன.
நிஃப்டி குறியீட்டில் உள்ள ஏசியன் பெயிண்ட்ஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், ஹெச்.டி.எஃப்.சி, பஜாஜ் பைனான்ஸ், பார்தி ஏர்டெல் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே டாடா ஸ்டீல், ஹிண்டால்கோ, ஜே.எஸ்.டபள்யூ ஸ்டீல், ஓ.என்.ஜி.சி, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
இதுபோன்று BSE-இல், CarTrade பங்குகள் அதன் IPO வெளியீட்டு விலையில் இருந்து 2% க்கும் குறைவாக குறைந்து, ரூ.1,579 க்கு வர்த்தகம் செய்யப்பட்டது. ஆரம்ப ஒப்பந்தங்களில் ஸ்கிரிப் ரூ.1,476 ஆக குறைந்தது. CarTrade Tech IPO சந்தாவின் நிறைவு நாளில் 20.29 முறை சந்தா செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகா : நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஒபுலாபுரம் சட்டவிரோத சுரங்க வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் மற்றும் 3 பேரை குற்றவாளிகள்…
சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில்,…
சென்னை : நகர்புறங்களில் பெரும்பாலும் கேன் குடிநீர் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும்…
சென்னை : நடிகர் சந்தானம் நடித்து முடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல' என்கிற நகைச்சுவைப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.…
சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…
டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…