வரலாற்றில் புதிய உச்சத்தில் சென்செக்ஸ்….58 ஆயிரத்தை கடந்து வர்த்தகம்…!

மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை வர்த்தகத்தில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
நடப்பு வாரத்தின் 5 வது வர்த்தக நாளான இன்று, பல்வேறு சர்வதேச காரணிகளுக்கு மத்தியில், இந்திய சந்தைகள் ஏற்றத்தில் காணப்படுகின்றன.இந்திய பங்குச்சந்தையில் நேற்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீட்டு எண் 57,602.18 புள்ளிகளில் வர்த்தகம் செய்யப்பட்டது.
இந்த நிலையில்,இன்று காலை தொடங்கிய வர்த்தகத்தில் பெரிய அளவிலான வளர்ச்சி அடையும் என எதிர்பாக்கப்பட்டது.அதன்படி, மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் குறியீட்டு எண் 231 புள்ளிகள் உயர்ந்து, 58,084 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டு புதிய உச்சத்தை எட்டியது. இதுபோன்ற தேசிய பங்குசந்தை நிஃப்டி குறியீட்டு எண் 65.15 அதிகரித்து, 17,294 புள்ளிகளாக காணப்படுகின்றன.
ஆரம்ப வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது ரூபாய் 2 பைசா உயர்ந்து 73.04 ஆக இருந்தது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025