Categories: வணிகம்

வாரத்தின் முதல் நாளில் வீழந்த சென்செக்ஸ்.! 200 புள்ளிகளுக்கு மேல் சரிவு.!

Published by
செந்தில்குமார்

கடந்த சில வாரங்களாக சரிவுடன் வர்த்தகமாகி வந்த இந்திய பங்குச்சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி, வாரத்தின் முதல் நாளான இன்று ஏற்றத்துடன் வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளது. முன்னதாக, மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ் 700 புள்ளிகள் வரை சரிந்தது. அதே போல், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ நிஃப்டி 231.90 புள்ளிகள் வரை சரிந்தது.

இந்த பங்குச்சந்தை வீழ்ச்சிக்கு அமெரிக்காவில் கடன் வட்டி வீதங்கள், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் மற்றும் பங்குச்சந்தையில் லாபத்தைப் பதிவு செய்து முதலீட்டாளர்கள் பணத்தைப் பெறுவது போன்றவை காரணமாக கூறப்படுகிறது. இந்தியப் பங்குச்சந்தையில் ஏற்பட்ட இந்த மாற்றத்தால் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் கவலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று 65,560 புள்ளிகள் என சரிவுடன் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ் 268.88 புள்ளிகள் சரிந்து 65,726.76 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. அதேபோல, என்எஸ்இ நிஃப்டி 83.30 புள்ளிகள் சரிந்து 19,570.20 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது.

முந்தைய வர்த்தக நாள் முடிவில் சென்செக்ஸ் 65,995 புள்ளிகளாகவும், நிஃப்டி 19,653 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது. இதற்கு முன்னால் 19 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகமாகி வந்த நிஃப்டி, முதல் முறையாக 20 ஆயிரம் புள்ளிகளை எட்டி சாதனை படைத்தது. அதோடு சென்செக்ஸ் 64,000, 65,000, 66,000, 67,000 என நான்கு மைல் கல்லைத் தாண்டி புதிய சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

ஆர்.சி.பி. வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் வழக்குப் பதிவு.!

உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…

43 minutes ago

வேலை நிறுத்தப் போராட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றால் நடவடிக்கை – தலைமைச் செயலாளர்.!

சென்னை : நாளை (ஜூலை 9, 2025) நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய…

2 hours ago

‘ரெயில் விபத்து அதிர்ச்சி, வேதனையளிக்கிறது’- தவெக விஜய் இரங்கல்.!

சென்னை : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு…

2 hours ago

போதைப்பொருள் வழக்கு: ‘நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு ஜாமீன்’ – உயர் நீதிமன்றம்.!

சென்னை : போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.…

3 hours ago

ஜூலை 18-ல் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்.!

சென்னை : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் அது குறித்து ஆலோசிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 18ம்…

3 hours ago

பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்தில் இதுவரை நடந்தது என்ன.?

கடலூர் : கடலூர் மாவட்டம், செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8) காலை 7:40 மணியளவில் தனியார் பள்ளி வேன் ஒன்று…

3 hours ago