வணிகம்

மூன்றாவது நாளில் உச்சம் தொட்ட சென்செக்ஸ்..! 67 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டி வர்த்தகம்..!

Published by
செந்தில்குமார்

இந்திய பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 67 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டி வர்த்தகமாகி வருகிறது.

கடந்த சில வாரங்களாக இந்தியப் பங்குச்சந்தை குறியீடுகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது. அந்தவகையில், 2வது வாரத்தில் சென்செக்ஸ் 65,000 புள்ளிகளைத்தாண்டி புதிய சாதனையை படைத்தது. இந்நிலையில் 3வது வாரத்தின் மூன்றாவது நாளான இன்று மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 67 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டி வர்த்தகமாகி வருகிறது

இன்றைய வர்த்தக நாளில் 66,905 புள்ளிகளாக தொடங்கிய சென்செக்ஸ், 222.47 புள்ளிகள் உயர்ந்து 67,017 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 71.90 புள்ளிகள் உயர்ந்து 19,821 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது.

முந்தைய வர்த்தக நாள் முடிவில் சென்செக்ஸ் 66,795 புள்ளிகளாகவும், நிஃப்டி 19,749 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது. சென்செக்ஸ் குறியீடு 67 ஆயிரம் புள்ளிகளை தாண்டி வர்த்தகம் நடைபெற்று வருவதால் முதலீட்டாளர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இதற்கிடையில், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு சந்தையில் முதலீடு செய்து வரும் வேளையில் உள்நாட்டு முதலீட்டாளர்கள் தங்களது அதிகப்படியான பங்குகளை விற்பனை செய்து வருகின்றனர். கடந்த மாதங்களை விட மே மாதத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் கிட்டத்தட்ட ரூ.30,000 கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளனர்.

என்டிபிசி லிமிடெட், இண்டஸ்இண்ட் வங்கி, பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ், பஜாஜ் ஃபைனான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்படுகின்றன. ஏசியன் பெயிண்ட்ஸ், மஹிந்திரா & மஹிந்திரா, மாருதி சுசுகி இந்தியா, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ஐசிஐசிஐ வங்கி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன.

Published by
செந்தில்குமார்

Recent Posts

இங்கிலாந்துக்கு எதிரான இந்திய டெஸ்ட் தொடரில் தமிழர்கள்.! யார் அந்த இருவர்?

டெல்லி : இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்தியாவின் புதிய டெஸ்ட் கேப்டனாக ஷுப்மான் கில் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்த சுற்றுப்பயணத்திற்கான துணை…

22 minutes ago

“படம் வந்ததே நிறைய பேருக்கு தெரில.. எங்க மேலதான் தப்பு”- விஜய் சேதுபதி வருத்தம்!

சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் 51-வது படமான ''Ace'' திரைப்படம் நேற்று (மே 23) அன்று திரையரங்குகளில் வெளியானது.…

1 hour ago

நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்னவெல்லாம் வலியுறுத்தினார்.?

டெல்லி : வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தலைப்பில் பிரதமர் மோதி தலைமையில், நிதி ஆயோக்கின் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. டெல்லியில்…

2 hours ago

BSF வீரர்கள் சொல்ல சொல்ல கேட்கல.., எல்லை தாண்டிய பாக். நபர் சுட்டுக்கொலை.!

குஜராத் : பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் எல்லை தாண்டி வந்த பாகிஸ்தானியரை சுட்டுக் கொன்றதாக இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை…

2 hours ago

டெஸ்ட் கேப்டனாக சுப்மன் கில் நியமனம்..! இந்திய அணி Squad இதுதான்!

டெல்லி : வருகின்ற ஜூன் 20 ஆம் தேதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான…

5 hours ago

”ED அல்ல மோடிக்கும் பயப்பட மாட்டோம்” – முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.!

சென்னை : டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். முன்னதாக,…

5 hours ago