இங்கிலாந்துக்கு எதிரான இந்திய டெஸ்ட் தொடரில் தமிழர்கள்.! யார் அந்த இருவர்?
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்,சுப்மான் கில் தலைமையிலான 18 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

டெல்லி : இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்தியாவின் புதிய டெஸ்ட் கேப்டனாக ஷுப்மான் கில் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்த சுற்றுப்பயணத்திற்கான துணை கேப்டனாக விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
மே 7 ஆம் தேதி, ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 38 வயதான ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, யார் கேப்டன் பதவியை ஏற்பார்கள் என்ற கேள்வி அனைவரது மனதிலும் இருந்து கொண்டிருந்த வேளையில், 25 வயதான இளம் வீரர் ஷுப்மான் கில், இந்திய டெஸ்ட் அணியின் 37வது கேப்டனாகப் பொறுப்பேற்றார்.
தற்பொழுது, டெஸ்ட் தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் 2 தமிழர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் வேறுயாருமல்ல ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் மற்றும் தொடக்க வீரரான சாய் சுதர்சன் ஆகியோர் தான் அணியில் இடம் பிடித்துள்ளனர். உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் வெளுத்து வாங்கிய சாய் சுதர்சனுக்கு முதல் முறையாக அணியில் இடம் கிடைத்தது. அதே போல் ஆடும் 11-னிலும் வாய்ப்பு கிடைத்தால் அருமையாக இருக்கும்.
சாய் சுதர்சன் :
ஐபிஏல்லில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக எட்டு இன்னிங்ஸ்களில் இருந்து 141.40 ஸ்ட்ரைக் ரேட்டில் 256 ரன்கள் எடுத்து கவனம் ஈர்த்துள்ளார். மேலும், அவர் உள்நாட்டு கிரிக்கெட் மற்றும் U-19 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தார். கடந்த 2022 ஆம் ஆண்டு ரஞ்சி டிராபியில் அறிமுகமான அவர், ஹைதராபாத்திற்கு எதிராக 179 மற்றும் 42 ரன்கள் எடுத்தார். தனது சமீபத்திய ரஞ்சிப் போட்டியில், சாய் சுதர்சன் நான்கு இன்னிங்ஸ்களில் இருந்து 76 சராசரியுடன் 304 ரன்கள் எடுத்தார், இதில் இரட்டை சதம் மற்றும் ஒரு அரைசதம் அடங்கும்.
வாஷிங்டன் சுந்தர் :
குஜராத் டைட்டன்ஸ் அணியின் இந்த ஆல்ரவுண்டர் இந்த சீசனில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் பெரும் தோல்வியை சந்தித்துள்ளார். அவர் 5 போட்டிகளில் 85 ரன்கள் மட்டுமே எடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆனால், அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 9 போட்டிகளில் விளையாடியுள்ளார், அதில் சுந்தர் 468 ரன்கள் எடுத்து 25 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இந்திய டெஸ்ட் அணி :
ஷுப்மன் கில் (கேப்டன்), சாய் சுதர்சன், முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், பிரசித் கிருஷ்ணா, ரிஷப் பந்த் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், துருவ் ஜூரல், கே.எல். ராகுல். பும்ரா, ஆகாஷ் தீப், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ் குமார் ரெட்டி, ஷர்துல் தாக்கூர், அர்ஷ்தீப் சிங்