BSF வீரர்கள் சொல்ல சொல்ல கேட்கல.., எல்லை தாண்டிய பாக். நபர் சுட்டுக்கொலை.!
குஜராத்தில் பனஸ்கந்தா மாவட்டத்தில் எல்லை தாண்டி ஊடுருவ முயன்ற பாகிஸ்தானை சேர்ந்த நபரை சுட்டுக்கொன்றது.

குஜராத் : பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் எல்லை தாண்டி வந்த பாகிஸ்தானியரை சுட்டுக் கொன்றதாக இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) சனிக்கிழமை தெரிவித்துள்ளது. சர்வதேச எல்லையை தாண்டிய பிறகு எல்லை வேலியை தாண்ட அந்நபர் முயற்சி செய்யும் வேலையில், BSF வீரர்கள் அவரை எச்சரித்தும் முன்னேறியதால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கும், இரு நாடுகளுக்கும் இடையே அதிகரித்து வரும் இராணுவ பதட்டங்களுக்கும் பிறகு, இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தாக்குதலுக்குப் பதிலடியாக, இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையைத் தொடங்கியது.
இது தொடர்பாக BSF வெளியிட்ட அறிக்கையில் “குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற ஒரு பாகிஸ்தானிய நபரை, நெற்றிரவு நேரத்தில், BSF வீரர்கள் வெற்றிகரமாக சூட்டு வீழ்த்தினர். சர்வதேச எல்லையைத் தாண்டிய பிறகு எல்லை வேலியை நோக்கி சந்தேகத்திற்கிடமான ஒருவர் முன்னேறுவதை BSF வீரர்கள் கண்டனர். அவரை எச்சரித்தும் அந்த நபர் தொடர்ந்து முன்னேறினார், இதனால் அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
BSF troops neutralised a Pakistani intruder attempting to enter Indian territory in Banaskantha district, Gujarat, on May 23 during night. BSF troops spotted one suspicious person advancing towards the border fence after crossing the International Border. They challenged the… pic.twitter.com/qQu8pXsaZj
— ANI (@ANI) May 24, 2025