குஜராத் : பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் எல்லை தாண்டி வந்த பாகிஸ்தானியரை சுட்டுக் கொன்றதாக இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) சனிக்கிழமை தெரிவித்துள்ளது. சர்வதேச எல்லையை தாண்டிய பிறகு எல்லை வேலியை தாண்ட அந்நபர் முயற்சி செய்யும் வேலையில், BSF வீரர்கள் அவரை எச்சரித்தும் முன்னேறியதால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கும், இரு நாடுகளுக்கும் இடையே அதிகரித்து வரும் இராணுவ பதட்டங்களுக்கும் பிறகு, இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் […]