மதுரை எய்ம்ஸ்: "கற்பனை காட்சிக்கே 10 வருஷமா?" – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்.!
சென்னை : 2019-ல் மதுரை எய்ம்ஸ் ஹாஸ்பிடலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிலையில், இதன் 3D வடிவமைப்பு வீடியோ இன்றைய தினம் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த 3டி வீடியோ வெளியீட்டை கடுமையாக விமர்சித்தார். அவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மதுரைக்கு வந்தபோது, எய்ம்ஸ் மருத்துவமனையின் தற்போதைய நிலையை ஆய்வு செய்யவில்லை என்றும், அதற்கு பதிலாக "கற்பனைக் காட்சிகளை" (3D வீடியோ) மட்டும் வெளியிட்டு மக்களை ஏமாற்ற முயல்வதாகவும் குற்றம்சாட்டினார். இந்த வீடியோவைக் [...]