“படம் வந்ததே நிறைய பேருக்கு தெரில.. எங்க மேலதான் தப்பு”- விஜய் சேதுபதி வருத்தம்!
Ace படம் வந்ததே நிறைய பேருக்கு தெரில.. எங்க மேலதான் தப்பு இரு விஜய் சேதுபதி வருத்தம் தெரிவித்துள்ளார்.

சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் 51-வது படமான ”Ace” திரைப்படம் நேற்று (மே 23) அன்று திரையரங்குகளில் வெளியானது. விஜய் சேதுபதி தவிர, ருக்மணி வசந்த் மற்றும் யோகி பாபு ஆகியோர் முன்னணி வேடங்களில் நடிக்கும் இந்த படம் ஒரு காதல், க்ரைம் கலந்த நகைச்சுவைத் திரைப்படம்.
இந்தப் படத்தை ‘ஒரு நல்ல நாள் பாட்டு சொல்றேன்’ புகழ் ஆறுமுக குமார் இயக்கியுள்ளார். படத்தை இயக்கிய ஆறுமுககுமார் தனது 7CS என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் மூலம் ஏஸ் இந்த படத்தை தயாரித்துள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார், கரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஃபென்னி ஆலிவர் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.
இப்படம் வெளியான முதல் நாளில் ரூ.1 கோடி வசூல் செய்திருந்த நிலையில், இந்த படத்தை பார்த்த பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய விஜய் சேதுபதி, “ACE திரைப்படம் ரிலீஸ் ஆனதே நிறைய பேருக்குத் தெரியல. அது எங்க தப்புதான். சில நெருக்கடிகளால் படத்தை உடனடியாக வெளியிட வேண்டிய சூழல் வந்துவிட்டது.
இருந்தாலும் மக்களிடம் இருந்து பாசிட்டிவான விமர்சனம் வருவது மகிழ்ச்சியாக உள்ளது. கமல், சிம்பு போன்ற பெரிய நடிகர்கள் நடித்த ‘THUG LIFE’ படத்தை விளம்பரப்படுத்தவே 25 நாட்கள் தேவைப்படுகிறது” என்று கூறினார்.