நாள் முடிவில் ஏற்றமடைந்த சென்செக்ஸ்.! 300 புள்ளிகளுக்கு மேல் உயர்வு.!

sensex high

கடந்த சில வாரங்களாக இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் ஆன சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் வர்த்தகமாகி வந்தது. அதன் தொடர்ச்சியாக சென்ற வாரத்தில் கடந்த நான்கு நாட்களிலும் சரிவுடனே வர்த்தகமானது. இந்த சரிவினால் ஒரே நாளில் முதலீட்டாளர்கள் ரூ. 5 லட்சம் கோடிக்கு மேல் இழந்துள்ளனர்.

இதனை ஈடு செய்யும் விதமாக வாரத்தின் இறுதி வர்த்தக நாளில் பங்குச்சந்தை 600 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த நிலையில் பல முன்னணி நிறுவனங்களில் பங்குகள் ஏற்றமடைந்தன. ஆனால்  இந்த வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் வர்த்தகமானது.

அதன்படி, இன்று காலை நிலவரப்படி 63,885 புள்ளிகள் எனத் தொடங்கிய சென்செக்ஸ், 238.77 புள்ளிகள் சரிந்து 63,544.03 புள்ளிகளாக வர்த்தகமானது. நிஃப்டி 43.30 புள்ளிகள் சரிந்து 19,003.95 புள்ளிகளாக வர்த்தகமானது. இதனால் மதியம் வரை சில நிறுவங்களின் பங்குகள் சரிவை சந்தித்தன. ஆனால் 3 மணிக்கு மேலாக சென்செக்ஸ் ஏற்றமடைய ஆரம்பித்தது.

இதனால் வர்த்தக நாளின் முடிவில் பங்குச்சந்தை ஏற்றமடைந்தது. அந்த வகையில் மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ் 329.85 புள்ளிகள் உயர்ந்து 64,112.65 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. அதேபோல, தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ நிஃப்டி 93.65 புள்ளிகள் உயர்ந்து 19,140.90 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது.

முந்தைய வர்த்தக நாளின் முடிவில் சென்செக்ஸ், 634.65 புள்ளிகள் உயர்ந்து 63,782.80 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்தது. தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ நிஃப்டி 190.00 புள்ளிகள் உயர்ந்து 19,047.25 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்தது. பிரெண்ட் கச்சா எண்ணெய் 1.45 டாலர் விலை குறைந்து 89.03 டாலராக விற்பனையாகி வருகிறது.

சர்வதேச சந்தையில் 1 பிபிஎல் கச்சா எண்ணெயின் விலை 119.00 அல்லது 1.67% குறைந்து ரூ.7,009 ஆக விற்பனையாகி வருகிறது. பங்குச்சந்தையில் ஏற்பட்ட இந்த மாறுதலால், சென்செக்ஸில் மஹிந்திரா & மஹிந்திரா, அல்ட்ராடெக் சிமெண்ட், மாருதி சுசுகி இந்தியா, லார்சன் & டூப்ரோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்துள்ளன

இண்டஸ்இண்ட் வங்கி, எச்சிஎல் டெக்னாலஜிஸ், ஐடிசி லிமிடெட், பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்துள்ளன. முன்னதாக. சென்செக்ஸ் 64,000, 65,000, 66,000, 67,000 என நான்கு மைல் கல்லைத்தாண்டி புதிய சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live - 09052025
India Pak War tensions
India Pakistan Tensions
schools shut
Jammu and Kashmir