நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் மற்றும் சர்வேதச பொருளாதார சூழல் ஆகியவற்றின் காரணமாக மும்பையில் இன்று பங்கு சந்தைகள் பெரும் சரிவை சந்தித்தன.
கடந்த 5ம் தேதி நாடாளுமன்றத்தில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி உயர்வு மற்றும் பெட்ரோல் டீசல் மீதான கலால் வரி ஆகியவை உயர்த்தப்பட்டது. இதனை அடுத்து அன்றைய தினமே பிற்பகலுக்கு பின் பங்குச்சந்தை சரிவை சந்திக்க தொடங்கியது. இரு நாட்கள் விடுமுறைக்கு பின் இன்று தொடங்கிய பங்கு சந்தை காலை முதலே கடும் சரிவை நோக்கி சென்றது.
சர்வதேச பொருளாதார சூழல் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இன்றைய பங்கு சந்தை முடிவில். இந்திய பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 900 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 38,666 புள்ளிகளாக சரிந்தன. அதே போல் தேசிய பங்குச்சந்தை எண் நிஃப்டி 268 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 11,600 புள்ளிகளாக சரிந்தன.
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…