பழமையான விண்டேஜ் கார்களுக்கான அரசாங்கத்தின் புதிய விதிகளை அறிந்து கொள்ளலாம் வாருங்கள். விண்டேஜ் வாகனங்களுக்கான புதிய விதிகளின் படி ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் அவற்றின் அசல் பதிவு அடையாளத்தைத் தக்க வைத்துக் கொள்ளலாம் என்றும்,புதிய பதிவு ஒரு தனித்துவமான விஏ தொடரின் கீழ் நடைபெறும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. விண்டேஜ் மோட்டார் வாகனங்கள்: 50+ பழமையான மற்றும் அவற்றின் அசல் வடிவத்தில் பராமரிக்கப்பட்டுள்ள அனைத்து இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் விண்டேஜ் […]
டெஸ்லா மின்சார சைபர்ட்ரக் வாகனத்தின் கதவுகளில் கைப்பிடிகள் இருக்காது என்று அதன் நிறுவனர் எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார். உலகின் பிரபல மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவின் சைபர்ட்ரக்கை ஒரு பெரிய திறன் கொண்ட ‘மின்சார பிக்-அப் டிரக்’ என்று அழைக்கலாம்.ஏனெனில்,சைபர்ட்ரக் ஒரு ஸ்போர்ட்ஸ் காருக்கு இணையான செயல்திறனைக் கொண்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பரில் முதன்முதலில் சைபர்ட்ரக் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது.இந்த சைபர்ட்ரக் டெக்சாஸில் உள்ள டெஸ்லா தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகிறது. சமீபத்தில்,டெஸ்லா தலைமை நிர்வாக […]
ஓலா இ-ஸ்கூட்டர் முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது.அதன் விவரங்களை காண்போம். ஓலா இ-ஸ்கூட்டர் முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது என்று அந்நிறுவனத்தின் தலைவர் பவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். மேலும்,இதுகுறித்து அவர் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது: “இந்தியாவின் மின்சார வாகன புரட்சி இன்று தொடங்குகிறது! ஓலா ஸ்கூட்டருக்கு முன்பதிவு இப்போது ஆரம்பமாகிறது! மின்சார வாகன உற்பத்தியில் உலகத் தலைவராவதற்கு இந்தியாவுக்கு ஆற்றல் உள்ளது.எனவே,இதனை வழிநடத்துவதில் பெருமிதம் கொள்கிறோம்”,என்று பதிவிட்டுள்ளார். முன்பதிவு: இதனால்,ஓலா இ-ஸ்கூட்டரை வாங்க விரும்புவோர் […]
லம்போர்கினி ஹுராக்கன் எஸ்.டி.ஓ மாடல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.அதன் விவரக்குறிப்புகள், விலை, அம்சங்கள் போன்றவற்றை காண்போம். இத்தாலியை தலைமையிடமாக கொண்ட பிரபல ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான லம்போர்கினி அதன் புதிய ஹுராக்கன் எஸ்.டி.ஓ மாடலை இந்தியாவில் தற்போது அறிமுகம் செய்துள்ளது. விலை: இதன் ஆரம்ப விலை ரூ. 4.99 கோடி ஆகும் (எக்ஸ்-ஷோரூம், இந்தியா).இது மற்ற ஹுராக்கன் மாடலையும் விட சிறந்த செயல்திறனை வழங்குவதன் மூலம் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படவுள்ளது. கடந்த ஆண்டு உலகளவில் வெளிப்படுத்தப்பட்ட, […]
டெஸ்லா மின்சார காரில் கேமராக்கள் பொருத்துவதற்காக 436 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் சாம்சங் நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது. எலோன் மஸ்க்கின் எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவுடன் 436 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஒப்பந்தத்தில் சாம்சங் நிறுவனம் கையெழுத்திட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி,தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான அமெரிக்காவின் மிகப்பெரிய மின்சார கார் உற்பத்தியாளரான டெஸ்லா நிறுவனத்திற்கு ,சாம்சங் நிறுவனம் தனது தயாரிப்பிலான கேமராக்களை வழங்கவுள்ளது. மேலும்,சாம்சங்கின் கேமராக்கள் டெஸ்லாவின் 2019 நவம்பர் மாதத்திற்கு பிறகு தயாரிக்கப்பட்ட மின்சார […]
உள்நாட்டு இரு சக்கர வாகன மின்சார வாகன உற்பத்தியாளர் ரெவோல்ட் மோட்டார்ஸ் தனது பிரபலமான பைக் ஆர்.வி 400 ஐ மீண்டும் முன்பதிவுகளை செய்ய உள்ளது. இந்த மின்சார பைக்கின் இரண்டாவது தொகுதிக்கான முன்பதிவுகளை ஜூலை 15 முதல் நண்பகல் 12 மணிக்கு நிறுவனம் மீண்டும் திறக்க உள்ளது என கூறப்படுகிறது. இருப்பினும், இது குறித்து நிறுவனம் தற்போது வரை எந்த தகவலையும் வழங்கவில்லை. கடந்த மாதத்தில், டெல்லி, மும்பை, புனே, சென்னை, அகமதாபாத் மற்றும் ஹைதராபாத் […]
1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போரில் 50 ஆண்டுகால வெற்றியை கொண்டாடும் நோக்கில் இராணுவத்தின் நினைவாக ஜாவா மோட்டார் சைக்கிள்கள் கிளாசிக் ஜாவா பைக்குகளை இரண்டு புதிய வண்ணங்களில் அறிமுகப்படுத்தின. இந்த இரண்டு பைக்குகளின் விலை 1.93 லட்சம் அனைத்து டீலர்ஷிப்களிலும் விற்பனைக்கு கிடைக்கும். ஜாவா பைக் காக்கி மற்றும் மிட்நைட் கிரே ஆகிய இரண்டு வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுளள்து. இந்த இரண்டு வண்ணங்களும் இந்திய இராணுவத்தின் வீரம் மற்றும் துணிச்சலைக் காட்டுகின்றன. இதனுடன், பைக்கின் பெட்ரோல் […]
டெஸ்லா போட்டியாளரான ட்ரைடன் (ஈ.வி) தெலுங்கானாவில் ரூ.2,100 கோடி முதலீடு செய்வதால் 25,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என அமைச்சர் கே.டி.ராமராவ் தெரிவித்துள்ளார். எலோன் மஸ்க் தலைமையிலான டெஸ்லா நிறுவனத்தின் முக்கிய போட்டியாளரான அமெரிக்காவைச் சேர்ந்த மின்சார வாகனங்கள் தயாரிப்பு நிறுவனமான ட்ரைடன் (ஈ.வி) ,தெலுங்கானா மாநிலத்தின் சங்கரெட்டி மாவட்டத்தில் 1,100 கோடி ரூபாய் முதலீட்டில் தனது உற்பத்தி ஆலையை நிறுவ மாநில அரசாங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இது தொடர்பாக,தெலுங்கானா தகவல் தொழில்நுட்ப மற்றும் தொழில்துறை அமைச்சர் […]
ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் திரைப்படத் தொடரில் பால் வாக்கர் பயன்படுத்திய 1994 டொயோட்டா சுப்ரா 4 கோடிக்கு விற்கப்பட்டு சாதனை படைத்துள்ளது. ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் திரைப்படமானது ஹாலிவுட்டில் மட்டுமின்றி அனைத்து நாடுகளிலும் பிரபலமானது.மேலும்,இப்படத்தின் 9 வது பாகம் தற்போது பிரமாண்டமாக உருவாக்கப்பட்டு வருகிறது.இந்த படத்தில் நடித்த வின் டீசல் மற்றும் பால் வாக்கர் ஆகியோர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்களாக உள்ளனர்.இதற்கிடையில்,கடந்த நவம்பர் 30, 2013 இல் பால் வாக்கர் கார் விபத்தில் உயிரிழந்தார். இந்நிலையில்,அமெரிக்காவின் […]
ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட விலையுர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்று இத்தாலி நாட்டின் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது. ஏனெனில்,ரோல்ஸ் ராய்ஸ் காரின் இருக்கைகள் மற்றும் உள் கதவுகள் உள்ளிட்ட காரின் உள் அமைப்பானது சட்டவிரோதமாக முதலை தோலால் வடிவைமைக்கப்பட்டிருந்தது. பொதுவாக கார் வாங்குபவர்கள்,அதனை தங்கள் விருப்பத்திற்கேற்ப வடிவமைக்க மூன்றாம் தரப்பு கடையைப் பயன்படுத்துவது வழக்கம்.அவ்வாறு மாற்றும்போது சிலர் சட்ட ரீதியான எந்த விதிமுறைகளையும் பின்பற்றுவதில்லை. அந்த வகையில்,ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சூப்பர் கவர்ச்சியான ரோல்ஸ் ராய்ஸ் […]
டெஸ்லாவின் தலைமை அதிகாரியான எலோன் மஸ்க் மார்ச் 8 திங்கள் கிழமையான இன்று 27 பில்லியன் டாலர்களை இழக்க நேர்ந்துள்ளார்.ஏனெனில் வாகன தயாரிப்பாளர்களின் பங்கு மதிப்புகள் தொழில்நுட்ப பங்கு மதிப்புகளின் விற்பனையின் காரணமாக சரிந்ததால் அவருக்கு இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் எலோன் மஸ்க்கின் நிகர மதிப்பு 157 பில்லியனாக குறைந்துள்ளதனால் அமேசான் தலைமை அதிகாரி ஜெஃப் பெசோஸை விட 20 பில்லியன் டாலர் குறைந்து பின்னிலையில் உள்ளார் என்றும்,அமெரிக்க இதழான ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது. இதனால் டெஸ்லாவின் […]
ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா தனது புதிய மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நிறுவனம் புதிய ஹோண்டா சிபி 350 ஆர்எஸ் மாடல் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக்கின் விலை ரூ.1,96,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது சிபி 350 ஐ விட சுமார் 10 ஆயிரம் ரூபாய் அதிகம் என கூறப்படுகிறது. புதிய ஹோண்டா சிபி 350 ஆர்எஸ் பிளாக் மற்றும் ரேடியண்ட் ரெட் மெட்டாலிக் கலரில் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கின்றன. நீண்ட தூர பயணங்களில் […]
கவாஸாகி நிறுவனம், இந்தியாவில் தனது புதிய கவாஸாகி 2021 Z650-ஐ அறிமுகப்படுத்தியது. அதன் விலை மற்றும் முழு விபரங்கள் குறித்து காணலாம். ஸ்போர்ட்ஸ் பைக் என்றாலே பலருக்கும் முதல் முதலில் நியாபகம் வருவது, கவாஸாகி நிஞ்ஜா தான். அதன்பின் பலருக்கும் பிடித்த பைக், கவாஸாகி Z series தான். உலக சந்தைகளில் ஏத்தனையோ பைக்குகள் வெளிவந்தாலும், ஜப்பானின் கவாஸாகி பைக்குகளுக்கென ஒரு தனி ரசிகர் மன்றமே உண்டு. அந்தவகையில் கவாஸாகி, இந்தியாவில் தனது புதிய கவாஸாகி 2021 […]
கேடிஎம் மற்றும் ஹஸ்க்வர்னா நிறுவனம், தனது அனைத்து மாடல்கள் பைக்குகள் விலையை கணிசமாக உயர்த்தியுள்ளது. ஆஸ்திரியா நிறுவனமாக கேடிஎம், இந்தியாவில் பஜாஜ் நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. பஜாஜின் சாகான் தொழிற்சாலையில் கேடிஎம் பைக்குகள் தயாரிக்கப்பட்டு வருகின்றது. பஜாஜ் நிறுவனம், கேடிஎம் மட்டுமின்றி, ஹஸ்க்வர்னா பைக்குகளையும் இந்தியாவில் தயாரித்து, விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் கேடிஎம் பைக்குகள், இளைஞர்களிடம் அதிக வரவேற்பை பெற்று, பலரின் கனவு பைக்காக மாறியுள்ளது. மேலும் ஹஸ்க்வர்னா, கடந்தாண்டு தனது ஸ்வார்ட்பிளேன் 250 […]
சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூர் மற்றும் காரியாபண்ட் ஆகிய மாவட்டங்களில் ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் ஹோண்டா இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில், பைக்குகள் என்றாலே நமக்கு நியாபகம் வருவது, ஹீரோ ஹோண்டா பைக்குகள் தான். இந்த இரண்டு நிறுவனங்கள், ஒன்றிணைந்து இந்தியாவில் தங்களின் பைக்குகளை விற்பனை செய்து வந்தனர். ஆனால் சில காரணங்கள் காரணமாக இவ்விரண்டு நிறுவனங்கள் தனியாக செயல்பட்டு வருகின்றது. ஆயினும், இவ்விரண்டு பைக்குகளுக்கும் மக்கள் அதிகளவில் வாங்கி வருகின்றனர். […]
கேடிஎம் நிறுவனம், இந்தியாவில் தனது ஆர்சி (RC) ரக பைக்குகளை பல ஆண்டுகளாக விற்பனை செய்து வருகிறது. இந்த பைக்கின் மாடலை கேடிஎம் நிறுவனம் மாற்றுமா? என பலர் கேள்வி எழுப்பியுள்ள நிலையில், 2021 கேடிஎம் ஆர்சி 200 பைக்கின் புகைப்படம் இணையத்தில் கசிந்தது. இதற்கு முன்பாக இந்த பைக், ஐரோப்பாவில் சோதனை செய்யப்பட்டதை தொடர்ந்து, அதன் புகைப்படங்கள் கசிந்தது. தற்பொழுதுள்ள புகைப்படம், இந்தியா, புனேவில் உள்ள தொழிற்சாலையில் இந்த புதிய 2021 கேடிஎம் ஆர்சி 200 […]
புதிய பைக்குகள் வாங்க முடியாத பலர், தற்பொழுது யூஸ்டு பைக்குகளை வாங்க தொடங்கிவிட்டனர். குறிப்பாக, கொரோனா ஊரடங்கு முடிந்ததும் பலரும் தற்பொழுது இருக்கும் காலகட்டத்தில் பலரும் பழைய/யூஸ்டு பைக்குகளை வாங்கி வருகின்றனர். அந்தவகையில், யூஸ்டு பைக்குகள் வாங்குவதற்கான டிப்ஸ்களை காணலாம். கவனித்து கொள்வது: ஒரு வாகனம் வாங்கும்போது நீங்கள் முதலில் கவனித்துக்கொள்வது, அது எந்தொரு விபத்திலும் சிக்கியிருக்கக் கூடாது. அவ்வாறு விபத்தில் சிக்கி, ஏதாவது போலீஸ் கேஸ் இருக்கின்றதா? என்பதை நீங்கள் கேளுங்கள். அவ்வாறு கேட்பதில் தப்பே இல்லை. […]
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஜாவா நிறுவனம், தனது ஜாவா 42, ஜாவா கிளாஸிக் மற்றும் ஜாவா பெராக் ஆகிய பைக்குகளின் விலையை உயர்த்தவுள்ளது. செக்கோஸ்லோவாக்கியா (Czechoslovakia) நாட்டை தலைமையாக கொண்ட ஜாவா பைக் நிறுவனம், இந்திய சந்தைகளில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதில் குறிப்பாக ஜாவா பெராக், இளைஞர்களை அதிகளவில் கவர்ந்தது. இந்த ஜாவா பைக்குகளுக்கு போட்டியாக ராயல் என்ஃபீல்டு, பெனெல்லி இம்பீரியல் உள்ளிட்ட பைக்குகள் இருந்து வருகிறது. இந்தியாவில் மஹிந்திரா நிறுவனத்தின் கீழ் செயல்படும் […]
தற்போதைய காலத்தில் காரில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. அதிலும் குறிப்பாக பட்ஜெட் கார்களை அதிகளவில் வாங்குகின்றனர். நாம் காரில் செல்லும்போது ஏதேனும் விபத்து ஏற்பட்டால் நமது உயிரை காப்பதில் அதிகம் பங்காற்றுவது , சீட்பெல்ட் மற்றும் ஏர்பேக் ஆகும். இந்த ஏர்பேக்கின் வேலை என்னவென்றால், நமது கார் விபத்தில் சிக்கும்போது அந்த ஏர்பேக்குகள் விரிந்து, காரில் பயணிக்கும் பயணிகளை மூடிக்கொள்வதால், பயணம் செய்பவர்கள் சிறிய காயங்களுடன் உயிர்பிழைக்க அதிகளவில் வாய்ப்புள்ளது. இந்த வகையான ஏர்பேக்குகள், […]
எலக்ட்ரிக் பைக் நிறுவனமான ரிவோல்ட், அதன் ஆர்வி300 மற்றும் ஆர்வி400 ரக எலக்ட்ரிக் பைக்குகளின் விலையை ரூ.15,000 வரை உயர்த்தியுள்ளது. ரிவோல்ட், கடந்த 2019 ஆம் ஆண்டில் தனது புதிய ஆர்வி300 மற்றும் ஆர்வி400 ரக எலெக்ட்ரிக் பைக்குகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்த பைக்குகள், இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில், அதன் விலையை கடந்த பிப்ரவரி மாதம் உயர்த்தியுள்ளது. அப்பொழுது ஆர்வி300-ன் விலை, ரூ.84,999 எனவும், ஆர்வி400-ன் விலை ரூ.1,03,999 என விற்பனை செய்யப்பட்டு […]